Header Ads



பலஸ்தீனத்தை ஆதரிக்காது, இருக்கவே முடியாது - ராஜித


பலஸ்தீன விடுதலையை உறுதிப்படுத்தி எந்த கடின மான சூழலிலும் பாலஸ்தீனுடன் கைகோர்ப்பதாக இலங்கையின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளும் தெரிவித்துள்ளதுடன் ஏகாதிபத்திய ஆதிக்கத்தை ஏற்றுகொள்ள முடியாது எனவும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

"உலகின் அபிப்பிராயத்திற்கு மதிப்பளி ! கிழக்கு ஜெருசலேத்தை பலஸ்தீனத்தின் தலைநகராக ஏற்றுக்கொள்" என்ற தொனிப்பொருளில் பலஸ்தீன் இலங்கை நட்புறவு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாடு நேற்று கொழும்பு நகர மண்டபத்தில் இடம்பெற்றது. 

இலங்கையின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்  அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் , மதத் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 

நிகழ்வில் உரையாற்றிய பலஸ்தீன -இலங்கை நட்புறவு அமைப்பின் தலைவர் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகையில், 

பலஸ்தீன நாட்டில் இன்று இடம்பெற்றுவரும் சம்பவங்கள், அழிவுகள், அடக்குமுறைகள் அனைத்திற்கும் எதிராக இலங்கை அரசாங்கம் மிக நீண்டகாலமாகவே குரல் எழுப்பி வருகின்றது. கடந்த காலங்களில் நாம் ஒரு குழுவாக பலஸ்தீனத்திற்கு சென்றோம். அங்கு இடம்பெறும் அழிவுகளை நாம் கண்களால் அவதானிக்க முடந்ததது. இஸ்ரேல் அரசாங்கதின் ஆக்கிரமிப்பு, இஸ்ரேல் இராணுவத்தின் அடக்குமுறை, பலஸ்தீன வேலைத்திட்டங்கள் அனைத்தையும் கைப்பற்றி அம்மக்களை அடிமைகளாக்க மாற்றும் செயற்பாடுகளே நாம் உணர்ந்தோம். இவ்வாறான நிலையில் இவர்களின் ஏகாதிபத்திய சக்தியை எதிர்த்து முழு உலகமுமே திரும்பியுள்ளது. 



பலஸ்தீன மக்கள் இன்று ஆயுதத்துடன் போராடவில்லை, கற்களை கொண்டும் சிறிய தடுப்பு ஆயுதங்களை கொண்டுமே அவர்கள் போராடி வருகின்றனர். இவற்றை உணர்ந்த எவருக்கும் பலஸ்தீனத்தை ஆதரிக்காது இருக்கவே முடியாது. இந்த உலகில் தனிமையாகும் இஸ்ரேல் அரசாங்கத்தை காப்பாற்ற இன்று அமெரிக்கா முன்னெடுக்கும் முயற்சிகளின் முக்கியமான ஒன்றாகவே இப்போது ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து நாடுகளுமே எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன. மேலும் ஐக்கிய நாடுகள் சபை கூட இன்று அமெரிக்காவின் செயற்பாட்டை நிராகரித்து விட்டது. ஆகவே ஏகாதிபத்திய நாடுகளான இவை இரண்டு நாடுகளும் என்ன செய்தாலும் நாம் உலக நாடுகளுடன் கைகோர்த்து பலஸ்தீன உரிமைக்காகவும், சுதந்தரத்திற்காகவும் எந்தவொரு கடினமான சூழலிலும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றார்.

2 comments:

  1. தற்போதிருக்கும் பெரும்பான்மை அரசியல்வாதிகளில் ராஜிதவை நடுநிலையிலிருந்து நோக்கும் ஒருமனிதராக காணமுடிகிறது. இவரது சாதாறணமான போக்கு மத ஐக்கியத்தை வழர்க்கும் என நம்புகிறேன்.

    இவர்போல் ஓரளவு கிட்தட்ட விஜயதாசவும் ஆரம்பத்தில் இருந்தார், பின்னர் அவரையும் இனவாத கேன்ஸர் பிடித்துக்கொண்டது.

    இங்கு மஹிந்தவையும் மறக்கமுடியாது இவ்விடயத்தில்.

    அவர் விட்ட சிலமுக்கிய தவறுகளே அவரின் பின்னடைவுக்கு காறணம்.

    ReplyDelete
  2. Thanks for rajitha minister

    ReplyDelete

Powered by Blogger.