Header Ads



மஹிந்தவின் புகைப்படத்தை, பயன்படுத்த தடை - மஹிந்த சமரசிங்க

கூட்டு எதிரணியில் இருந்துகொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்கு எதிராகவும் கட்சியை பிளவுப்படுத்த உடன்படிக்கைச் செய்துகொண்டு வங்குரோத்து அரசியலை முன்னெடுத்துவருபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்படும். தேர்தலுக்கு முன்னர் எவ்வாறானவர்கள் குறித்த ஆதாரங்கள் திரட்டப்பட்டு கட்சியைவிட்டு விரட்டியடிக்கப்படுவார்களென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்தது.

கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே கப்பல்துறை மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் “கட்சிக்கு எதிராகச் செயற்பட்டு வருபவர்கள் குறித்து இரண்டரை வருடங்காளக பொறுத்துவிட்டோம் இனியும் பொறுத்திருக்க முடியாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தேர்தல்வரை கதவை திறந்தே வைத்திருந்தார். சு.கவின் வெற்றிக்கு உழைப்பார்கள் என்று. சிலர் ஆதரவளித்துள்ளனர். கட்சின் யாப்பை எவரும் மீறி செயற்பட முடியாது. கட்சியின் ஒழுக்கை பாதுகாக்க வேண்டும். அது கட்சியன் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் காரணியாகும். நாடாளுமன்ற மாகாண உள்ளூராட்சி என எந்த உறுப்பினராக இருந்தாலும் கட்சியின் யாப்பின் அடிப்படையிலேயே செயறபட முடியும்.

கட்சியின் பாதுகாப்பை கருதி இனியும் பொருத்திருக்க முடியாது. வேறு கட்சயிக்கும் வேறு நபர்களின் வெற்றிக்கும் உழைப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்படும். மாவட்ட ரீதியில் ஒவ்வொரு நபார்களை நியமித்து சு.கவின் வெற்றிக்கு எதிராகவும்இ கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்பட்டும் நபர்கள் குறித்த ஆதாரங்களை திரட்ட மாவட்ட ரீதியில் ஒவ்வொர்வரை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். தேர்தல் முடியும் வரை பொருத்திருக்க முடியஙாது. உடனடியாக கட்சி எதிராகச் செயற்படுபவர்களை விரட்டியடிக்க நடவடிக்கையெடுக்கப்படும்.

பீரிஸின் தாமரை மொட்டுக்கு ஆதரவளிப்பதாக கூறிய எவரும் வேட்புமனுத் தாக்கல் செய்யகூட போட்டியிடுபவர்களுடன் செல்வதில்லை. ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ஜனாதிபதியின் அறிவிப்பின் காரணமாகவே எவரும் செல்வதில்லை. வேட்புமனுத் தாக்கல் செய்ய செல்ல முடியாதவர்களால் எவ்வாறு வெற்றிக்கு உழைக்க முடியும். இது அக்கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை பாரிய கஷ்ட்ததில் போடும் செயற்பாடே. தற்போது கிராம புறங்களில் நடைபெறுமை் சிறிய சிறிய கூட்டங்களில் கலந்துகொள்ள செல்கின்றனர். ஆனால்இ அங்கு விடியோஇ புகைப்படம் எடுக்க தடைசெய்ப்பட்டுபள்ளதுடன்இ சொல்போன்களை கொண்டுசெல்ல அனுமதிப்பதில்லை. அத்துடன் ஊடகவியலாளர்களுக்கும் அனுமதியளிப்பதில்லை. பீரிஸுக்கு ஆதரவு வழங்குபவர்கள் தேர்தல் மேடையில் ஏற அஞ்சுவதுடன் மௌனமாகியுள்ளனர்.

மஹிந்தவின் புகைப்படத்தை பயன்படுத்தவும் தடைவிதிக்கிறோம். அவர் சு.கவின் சார்பிலேயெ நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார். எமது நிறத்தையும் பயன்படுத்துகின்றனர். இது அவர்களின் பங்கலோத்து அரசியலையே வெளிப்படுத்துகிறது. தமது கொள்கையை மக்களிடம் கொண்டுசெல்ல ஒரு பலமில்லாதவர்கள். சு.கவை பிளவுப்படுத்த உடன்படிக்கையொன் செய்கொண்டு செய்து வருகின்றனர். சு.கவை பிளவுப்படுத்தி கட்சியை காட்டிக்கொடுத்த தமது அரசியல் சுயலாபங்களுக்காகவும் நீதிமன்ற குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடவதே அவர்களின் இலக்காகும்.” என்றார்.

No comments

Powered by Blogger.