Header Ads



வானிலை அவதான, நிலையத்தின் எச்சரிக்கை

நாட்டிலிருந்து சுமார் 1300 மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இன்று மதியம் 12 மணியளவில் அந்த நிலையம் வௌியிட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக , எதிர்வரும் தினங்களில் (விசேடமாக நாளைய தினம் தொடக்கம்) நாட்டின் ஊடாக மற்றும் நாட்டை சுற்றிய கடற்பிரதேசங்களில் ( விசேடமாக வடக்கு , கிழக்கு மற்றும் தென் கடல் பிரதேசங்கள்) காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு , வட மத்திய , கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் விட்டு விட்டு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மற்றைய பிரதேசங்களில் மாலை 2.00 மணியளவில் மழை அல்லது இடியுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு , வடக்கு , வடமத்திய , வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான கடும் மழை வீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேபோல் , மேல் , சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் விட்டு விட்டு வீசும் காற்று மணிக்கு சுமார் 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் ​போது குறித்த பிரதேசங்களில் தற்காலிக கடும் காற்று வீசக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை அவதான நிலையம் , மின்னலால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்ள பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

1 comment:

  1. முஃமின்களே! உங்கள் மீதும் அல்லாஹ் புரிந்திருக்கும் அருட் கொடையை நினைத்துப் பாருங்கள்; உங்களிடம் (எதிரிகளின்) படைகள் வந்த போது (புயல்) காற்றையும், நீங்கள் (கண்களால்) பார்க்கவியலா (வானவர்களின்) படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம்; மேலும், நீங்கள் செய்வதை அல்லாஹ் உற்று நோக்குபவனாக இருக்கிறான்.
    (அல்குர்ஆன் : 33:9)

    ReplyDelete

Powered by Blogger.