Header Ads



மதீனா பல்கலைக்கழக உலகக்கிண்ணப் போட்டி - பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை


இம்முறை மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழத்தில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டிகளின் இறுதிப்போட்டி இன்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் மிக உக்கிரமாக நடைபெற்ற போது இலங்கை அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிவாகை சூடி சாதனை படைத்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது.

விறுவிறுப்பாக நடந்து முடிந்த இப்போட்டியில் முதலாவது துடுப்பாட்டத்திற்காக களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கட்டுகளை இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றது, அதனையடுத்து தொடந்து துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 9 ஓவர்கள் முடிவில் All out ஆகி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 81 ஓட்டங்கள் பெற்று தோழ்வியைத் தழுவியதையடுத்து இலங்கை அணி அமோக வெற்றி பெற்றது.

மேலும் இப்போட்டியில் ஷைக் ஹுஸ்னீ திறமையாக துடுப்பெடுத்தாடி 60 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்ததோடு ஷைக் ரயீஸ் சிறப்பாக பந்து வீசி ஆறு விக்கட்டுகளைக் கைப்பற்றி Hat-trick யினையும் பெற்று இலங்கை அணியின் வெற்றிக்கு பெரிதும் பாங்காற்றியுள்ளனர், இப்போட்டியில் சிறப்பாக விளயாடியமைக்காக ஷைக் ரயீஸுக்கு Man of the Mach கிடைக்கப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதுவரை கால பல்கலைக்கழக உலகக்கிண்ண கிரிகட் வரலாற்றில் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியதில் இது இரண்டாவது தடவை என்பது பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியதாகும், முதலாவது தடவை 2015ம் ஆண்டு ஷைக் Mohammad Azwar Madani இன் தலைமையிலும் இரண்டாவது தடவை இம்முறை ஷைக் P.M.Feroz இன் தலைமையிலும் உகக் கிண்ணத்தை இலங்கை அணி தன்வசப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னரும் பல தடவைகள் இலங்கை அணி Final க்கு வந்து சென்றிருப்பதை இவ்விடத்தில் நினைவு கூர்வது சாலச் சிறந்ததாகும், அத்தோடு முன்னைய தலைவர்களான Sheikh Rafi Mohamed, Sheikh Azeem Husain, Sheikh Azwar மற்றும் Sheikh Rushdy Rush ஆகியோரும் சக வீரர்களும் இலங்கை அணியின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிப்பு செய்துள்ளனர் என்பது பல்கலைக்கழக இலங்கை அணியின் வரலாற்றில் பதியப்பட வேண்டிய மிக முக்கியமான மைல் கற்களாகும்.

இலங்கை அணியின் இவ்வெற்றியையடுத்து அணியின் தலைவர் Sheikh P.M Feroz க்கும் சக வீரர்களுக்கும் எமது உளப்பூர்வமான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கும் இத்தருணத்தில் இலங்கை அணி இனிவரும் காலங்களிலும் தொடர் வெற்றிகளை தன்வசப்படுத்தும் பேற்றை வல்ல அல்லாஹ் தரவேண்டுமென அவனிடமே பிராத்திக்கிறோம்.

الحمد لله في الأول والآخر

Azhan Haneefa (Madani)

3 comments:

  1. Make this type of play for friendly and healthy reasons.. but do not make it for boasting as every others in the world.... Rather you all study Islam for guiding yourself and others.
    Take this advice positively

    May Allah guide all of us in the pure path of salafus saliheens with neeyah and ittibah rasool.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்
    இந்த தலைப்பையும் அதன்கீழாலுள்ள செய்திகளையும் பார்க்க கவலையாக இருக்கிறது.
    மதீனா பல்கலைக்கழகம் சென்று அல்லாஹ்வின் மார்க்கத்தை படிக்கும் மாணவர்களின் எழுத்தியல் எங்கே எனத்தோன்றுகிறது ?
    ஏதோ இலங்கை நாடும் பாகிஸ்தான் நாடும் யுத்தம் செய்தது போலல்லவா இருக்கு கத ?

    ReplyDelete
  3. இதில் வென்ற கிண்ணத்துடன் அணியினர் வந்து இலங்கை கிறிக்கட் கட்டுப்பாட்டு சபையையும் நாட்டின் தலைமைகளையும் சந்தித்து புரிந்துணர்வை இதில் ஏற்படுத்தலாமே?

    ReplyDelete

Powered by Blogger.