Header Ads



"இப்படியானவர்களைத்தான் தெரிவு செய்யுங்கள்" - விக்னேஸ்வரன்

மக்களை நேசிக்கும் பண்பும், திறமையும், ஊழலற்ற தன்மையும், நேர்மையும் கொண்டவர்களை உள்ளூராட்சி சபை தேர்தலில் மக்கள் தேர்ந்தெடுங்கள் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று -17- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

உங்கள் பிரதேசத்தை உள்ளன்புடன் நேசிக்கும் ஒருவரை தேர்ந்தெடுங்கள். அவருக்கு இருக்க வேண்டிய தகமைகள் நேர்மை, திறமை மற்றும் ஊழலை வெறுக்கும் பாங்கு போன்றவைகளே மக்களை நேசிக்க வைக்கின்றது.

எந்த கட்சி என்பது முக்கியமானதல்ல. ஊழலற்ற உயர்ந்த குணங்கள் உடைய வேட்பாளர்களை தேர்ந்தெடுங்கள். கட்சி பிழைத்துவிட்டாலும் அவர்கள் அந்தக் கட்சியிடையே மக்கள் ஆதரவிருந்தால் காலக்கிரமத்தில் மாற்றி அமைப்பார்கள்.

மக்களை நேசிக்கும் அவர்கள் பாங்கும் ஊழலற்ற அவர்களின் தன்மையும் அவர்களின் நேர்மையும் அதை செய்வன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு தேர்தல் விஞ்ஞாபனம் 2013ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு அதனடிப்படையிலேயே நாங்கள் பதவிக்கு வந்திருந்தோம்.

உள்ளூராட்சி சபைகள் எமது அதிகாரத்தின் கீழேயே இருந்து வருகின்றன. நாம் எதைக் கூறி மக்களின் ஆதரவுடன் பதவிக்கு வந்தோமோ அதன் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தெரிவு செய்யப்பட்டு பதவிக்கு வருவதே சிறந்ததாகும்.

எவ்வளவுதான் தமக்குள் போட்டி போட்டுக் கொண்டாலும் போட்டிபோடும் கட்சிகள் சேர்ந்து உருவாக்கியதே 2013ஆம் ஆண்டின் மாகாணசபை தேர்தல் விஞ்ஞாபனம்.

ஆகவே அதனை அவர்கள் அனைவரும் ஏற்பார்கள் என்றே கருதுகிறேன். மற்றவைக்கிடையில் தமிழர் தாயகம், வடகிழக்கு இணைப்பு, எம் உள்ளக சுயநிர்ணயம், சமஷ்டி போன்றவை அதில் வலியுறுத்தப்பட்டன.

அவற்றுடன் முக்கியமான ஊழலற்ற ஆட்சி, நிர்வாகத்திறன், உறுப்பினர்களின் தற்கால தேவைகளுக்கேற்ற தகமைகள் போன்றவையும் மேலதிகமாக வலியுறுத்தப்பட வேண்டும் என்றார்.

1 comment:

  1. எல்லாவற்றையும் விட முக்கியமாக இனவாதம் பேசக்கூடிய தலைவர்களை தெரிவு செய்யுங்கள் என்று கூற மறந்துவிட்டார்... இதனை அவர் சார்பாக கூறுகிறேன்... வயது முதிர்ந்த ஐயாவுக்கு ஞாபக மறதி அதிகம் தானே...

    ReplyDelete

Powered by Blogger.