Header Ads



"அது என், இறைவன் மாளிகை"


-நான் கவிஞன் -

நீ அழித்தொழிப்பது 
என் உயிராக இருக்கலாம்
ஆனால் 
என் ஆண்மா 
என் எழுத்துக்கள்
என்றும் பலஸ்தீனத்தை
சுற்றியே வரும்

நீ ஒரு கோளை
நீ சொல்லிக் கொள்ளும்
உன் நாடு 
அதன் பெயர் ஒருபோதும் 
என் வாயிலிருந்து வராது

சியோனிசனே இந்த உலகம்
பலஸ்த்தீனத்தை 
மறக்க துடிக்கலாம் 
அல்லது மறந்தே விடலாம்
அப்போது என் வார்த்தைகள்
அதை நாபகமூட்டும்

உன் கேவலத்தை நீ 
குதுஸில் மறைக்க முனைகிறாய் 
அது முடியாது
என் குதுஸ்
எங்கள் குதுஸ் 
அது எங்கள் உடமை
அதன் நிழலில் நீ 
ஓய்வெடுக்க விரும்பினும்
அதன் நிழல்கூட 
எங்கள் உடமை

அது என் இறைவன் மாளிகை 

No comments

Powered by Blogger.