Header Ads



பாராமன்ற உறுப்பினர்களுக்கான, ஓய்வூதியம் எவ்வளவு..?

இலங்கையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக, 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு கடந்த ஒக்ரோபர் மாதம் முதல் வழங்கப்படுகிறது.

இலங்கையில் 262 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மரணமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனைவிமார் 220 பேரும், ஓய்வூதியத்தைப் பெற்று வருகின்றனர்.

ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவர் 18,095 ரூபாவை ஓய்வூதியமாக பெற முடியும். 15 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவர் 36,190 ரூபாவை ஓய்வூதியமாக பெற முடியும். இவர்களுக்கு தற்போது 10ஆயிரம் ரூபாவை மேலதிகமாக வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதனால் அரசாங்கத்துக்கு, 26.2 மில்லியன் ரூபா மேலதிக செலவு ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.

பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது குறைகளை சபாநாயகருக்கு எடுத்துக் கூறியிருந்ததுடன், தமக்கு குறைந்தளவு ஓய்வூதியமே வழங்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தனர்.
சபாநாயகர் இதனை அரசாங்கத்திடம் தெரிவித்ததை அடுத்தே, அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.