Header Ads



பிக்குகளுக்கு லஞ்சம், வழங்கிய பிரதமர் - நாலக்க தேரர் குற்றச்சாட்டு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பௌத்த பிக்குகளுக்கு லஞ்சம் வழங்கியுள்ளதாக தேசிய உரிமைகள் அமைப்பின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள அபயாராமயவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்...

மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ள அரசாங்கம், விஹாரைகளின் ஊடாக மக்களின் ஆதரவினை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது. இந்த முயற்சி வெற்றியளிக்காது.

மஹிந்த ராஜபக்ச என்ன செய்தார் என்பது அதுரலிய ரதன தேரருக்கு தெரியும். அவ்வாறு இருந்தும் அவர் தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார்.

850 பௌத்த பிக்குகளை அலரி மாளிகைக்கு அழைத்து பணம் வழங்குவதனை நாங்கள் லஞ்சம் வழங்குவதாகவே பார்க்கின்றோம்.

பௌத்த பிக்குகளைக் கொண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்களின் ஆதரவினை திரட்டவே ரணில் இவ்வாறு செய்கின்றார்.

இவ்வாறு பணம் வழங்கியமை குறித்து எதிர்காலத்தில் தேர்தல் ஆணைக்குழுத் தலைவரிடம் விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும்.

நாற்பது கோடி ரூபா பணம் இதற்காக செலவிடப்பட்டுள்ளது, இது அரசாங்கப் பணம் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட ஓர் சம்பவமாகும்.

பிரதமர் நினைப்பது போன்று மக்கள் இந்த அரசாங்கம் மீது நம்பிக்கை கொள்ளவில்லை.மக்கள் இந்த அரசாங்கத்தை எதிர்க்கின்றனர் என பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Mr. Ranil Entering to Mr. Rajapaksas Political DRAMA.. All These politicians are SHITS. They did/ doing.. nothing for the future Good of our Beautiful Country..

    ReplyDelete

Powered by Blogger.