Header Ads



திருடிய­ வீட்டில் தேடுதல் நடத்­து­வ­தனை, மக்­க­ளுடன் நின்று வேடிக்கை பார்த்த திரு­டனை பிடித்த நாய்

ஒரு­வரின் வீட்டில் தங்க நகை­களை திருடி விட்டு ஒன்றும் அறி­யா­தவர் போல் பிர­தேச வாசி­க­ளுடன் இணைந்து வேடிக்கை பார்த்துக் கொண்­டி­ருந்த போது பெஞ்சோ என்று அழைக்­கப்­படும் மோப்ப நாய் குறித்த திரு­டனை துல்­லி­ய­மாக இனம் கண்டு பிடித்து கொடுத்த சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது.

வலப்­பனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மந்­தாரங் நுவர பிர­தே­சத்தில் நேற்று முன்­தினம் இடம் பெற்ற இச்­சம்­பவம் குறித்து மேலும் தெரிய வரு­வ­தா­வது சம்­பவ தினத்­துக்கு முதல் நாள் குறித்த நபர், மேற்­கு­றிப்­பிட்ட பகு­தியில் வீடொன்­றுக்குள் புகுந்து அங்­கி­ருந்த அலு­மா­ரியை உடைத்து அதி­லி­ருந்த பல இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்க ஆப­ர­ணங்­களை திரு­டி­யுள்ளார்.

இச்­சம்­பவம் குறித்து வலப்­பனை பொலி­ஸா­ருக்கு கிடைக்­கப்­பெற்ற முறைப்­பாட்­டுக்­க­மைய விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பொலிஸார் நுவ­ரெ­லி­யாவில் அமைந்­துள்ள மோப்ப நாய் பிரிவின் உத­வியை நாடி­யுள்ளனர்.

இதன் போது பிரதீப் என்ற பொலிஸ் கான்ஸ்­ட­பிளின் பரா­ம­ரிப்­பி­லி­ருந்து வந்த பெஞ்சோ என்ற மோப்ப நாய் வர­வ­ழைக்­கப்­பட்டு அதன் மூலம் தேடுதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இதன் போது திரு­டிய நபரால் கைவி­டப்­பட்ட கைக்­குட்டை ஒன்றை பொலிஸ் நாய் மோப்பம் பிடித்­துள்­ளது.

நாயின் தேடுதல் வேட்­டையை நூற்­றுக்கும் மேற்­பட்ட பொது­மக்கள் ஒன்­று­கூடி வேடிக்கை பார்த்துக் கொண்­டி­ருந்­துள்­ளனர்.

இச்­சந்­தர்ப்­பத்தில் திரு­டி­ய­தாக கூறப்­படும் நபரும் ஒன்றும் அறி­யா­தவர் போல் அங்கு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்­டி­ருந்­துள்ளார். இதன் போது குறித்த பொலிஸ் மோப்ப நாய் கூட்­டத்தில் ஏனை­ய­வர்­களை விலக்கிக் கொண்டு சென்று குறித்த நபரை துல்­லி­ய­மாக இனம் கண்டு காட்­டிக்­கொ­டுத்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து அங்கு கூடி நின்­ற­வர்கள் அனை­வரும் குறித்த நாயையும் அதன் பரா­ம­ரிப்­பா­ள­ரையும் வெகு­வாக பாராட்­டி­ய­துடன் அத­னுடன் இணைந்து புகைப்­ப­டங்­களும் எடுத்துக் கொண்­டனர்.

இதன் போது கைது செய்யப்பட்ட நபரை வலப்பனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக வலப்பனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிந்தக பெரேரா தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.