Header Ads



ஆழ்கடலில் மூழ்கப்போகும், முன்னாள் ஜனாதிபதிகளின் கார்கள்


விடுதலைப் புலிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு கருதிக், கடந்த 40 வருடங்களுள் நாட்டின் ஜனாதிபதிகளின் பாவனைக்காக இறக்குமதி செய்யப்பட்ட குண்டுதுளைக்காத 25 மோட்டார் வாகனங்களை ஆழ் கடலில் மூழ்கடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Mercedes Benz மற்றும் Jaguar வகை விலையுயர்ந்த இந்த மோட்டார் வாகனங்களில் முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மானுக்குக் கொண்டுவரப்பட்ட Toyota Land வாகனமும் உள்ளடங்குகிறது.

முன்னாள் ஜனாதிபதிகளான ஜெ.ஆர். ஜெயவர்தன, சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் குறித்த வாகனங்கள் பாவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனங்களை ஆழ் கடலில் மூழ்கடிப்பதற்கான பொறுப்பு கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளைக் குறித்த வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த தொடர்பாடல் மற்றும் பிற உபகரணங்கள் கழட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டுதுளைக்காத இந்த வாகனங்களை ஏலத்தில் விட்டால், பாதாள உலகத்துடன் தொடர்புடையவர்கள் அதனைக் கொள்வனவு செய்யச் சந்தர்ப்பம் காணப்படுவதால், இவ்வாறு ஆழ் கடலில் மூழ்கடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பல வருடங்கள் பழமைவாய்ந்த இந்த வாகனங்களைப் பழுது பார்ப்பதற்கு அதிக செலவாகவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. sink that and bring the new Maybach.

    Good plan well done.

    ReplyDelete
  2. "குண்டுதுளைக்காத இந்த வாகனங்களை ஏலத்தில் விட்டால், பாதாள உலகத்துடன் தொடர்புடையவர்கள் அதனைக் கொள்வனவு செய்யச் சந்தர்ப்பம் காணப்படுவதால்:"

    ஏன் அவர்களை, அவற்றைக் கொள்வனவு செய்ய வைத்து அவர்களையும், அவர்கள் ஊடாக பாதாள   உலகப் கோஷ்டியையும் பிடித்து உள்ளே  தள்ளக் கூடாதாம்?

    எல்லாவற்றையும் ஜேவிபியே வந்து செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் போலும்.

    ReplyDelete
  3. Display them at the Museum or a public park like in Nawala and Bellanwila. we also would like to see these vehicles; Or put on a auction sale internationally.

    ReplyDelete

Powered by Blogger.