Header Ads



பலஸ்தீனிய கோடீஸ்வரர், சவுதி அரேபியாவில் கைதாகி விடுதலை

பாலஸ்தீனம் நாட்டை சேர்ந்த பிரபல கோடீஸ்வரரும் அரபு வங்கி தலைவருமான சாபி அல்-மஸ்ரி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலஸ்தீனம் நாட்டை சேர்ந்த பிரபல கோடீஸ்வரர் சாபி அல்-மஸ்ரி. ஜோர்டான் நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் அரபு வங்கி தலைவரான இவர் பாலஸ்தீனம், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் கட்டுமானம், ஊடகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். 

சவுதி அரேபியா நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் சமீபத்தில் தனது தொழில் குழுமத்தை சேர்ந்த உயரதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த கூட்டத்தில் பங்கேற்க செல்வதற்கு முன்னர் கடந்த செவ்வாய்க்கிழமை சவுதி அரேபியா நாட்டு அதிகாரிகள் இவரை கைது செய்ததாக தகவல் வெளியானது. ரகசிய இடத்தில் வைத்து விசாரிப்பதாகவும் வந்த செய்திகளையடுத்து, அவரது உறவினர்கள், பாலஸ்தீனம் மற்றும் ஜோர்டான் நாட்டு மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், கைதான சாபி அல்-மஸ்ரி விடுதலை செய்யப்பட்டதாகவும், ரியாத் நகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றடைந்த அவர் விரைவில் சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறி பாலஸ்தீனம் வந்தடைவார் எனவும் ஜோர்டான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1 comment:

  1. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.
    (அல்குர்ஆன் : 3:103)

    ReplyDelete

Powered by Blogger.