Header Ads



பல 'அஸ்பெஸ்டோஸ்'கள் நாட்டை வந்தடையும் அபாயம் - வண்டினால் பாதிக்கப்பட்ட வெளியுறவு

லங்கையின் வெளியுறவுக் கொள்கை, வண்டினால் பாதிக்கப்பட்ட ஒன்றாக இன்று மாறியுள்ளது என, ஒன்றிணைந்த எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அநுருத்த, சிரியா, உகண்டா போன்ற நாடுகளுடன், பாகுபாடான உறவைக் கொண்டிருந்தது என, முன்னைய அரசாங்கத்தை, இந்த அரசாங்கம் குற்றஞ்சாட்டியது என்பதை ஞாபகப்படுத்தினார்.

"ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, ரஷ்யா போன்ற நாடுகளுடன், சுமூகமான உறவைக் கொண்டிருப்பதாக, இவ்வரசாங்கம் பெருமைபேசியது. ஆனால் இன்று, வண்டுக்கு அடிபணிந்துள்ளது" என்று குறிப்பிட்டார்.

அஸ்பெஸ்டோஸின் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, கொள்கை முடிவொன்றை ஜனாதிபதி எடுத்திருந்த நிலையில், வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியாமல், அது அமுல்படுத்தப்பட வேண்டும் என, அவர் குறிப்பிட்டார். அத்தோடு, அஸ்பெஸ்டோஸைத் தடைசெய்யாமலிருக்க எடுக்கப்பட்டுள்ள முடிவு காரணமாக, மேலும் பல அஸ்பெஸ்டோஸ் உற்பத்தி நிறுவனங்கள், நாட்டை வந்தடையும் எனவும் அவர் எதிர்வுகூறினார்.

No comments

Powered by Blogger.