Header Ads



புலித் தரப்பா? இராணுவத் தரப்பா...??

எனது தந்­தை­யான கப்டன் கே.பி. தச­நா­யக்­கவை   அநீ­தி­யான முறையில் கைது­செய்து தடுத்­து­வைத்­துள்­ளனர். அவர் தொடர்­பாக இலங்கை வந்த ஐ.நா. செயற்­கு­ழு­விடம் நான் முறைப்­பாடு செய்ய வந்­த­போதும் எனது முறைப்­பாட்­டை அவர்கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. புலி தரப்­பாக இருந்தால் ஏற்­றுக்­கொள்­வ­தா­கவும், இரா­ணுவ தரப்­பாக இருந்தால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்றும்  என்­னிடம் தெரி­வித்­து­விட்­டனர் என்று விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள கடற்­படை அதி­காரி கப்டன் கே.பி.தச­நா­யக்­கவின் மகள் மஞ்­சரி தச­நா­யக்க தெரி­வித்தார்.

இலங்கை வந்த தன்­னிச்­சை­யாக தடுத்­வைத்தல் தொடர்­பாக ஆராயும் ஐ.நா. செயற்­குழு பிர­தி­நி­திகள் நேற்று கொழும்பு பண்­டா­ர­நா­யக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்­டப குழு அறையில் இலங்கை

விஜயம் தொடர்­பாக விளக்­க­ம­ளிக்கும்   செய்­தி­யாளர் சந்­திப்பை நடத்­தினர். செய்­தி­யாளர் சந்­திப்பு முடி­வ­டைந்­ததும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் குழு அறை­யி­லி­ருந்து வெளியே வந்­த­போது கடற்­படை அதி­கா­ரியின் மகள் மஞ்­சரி தச­நா­யக்க அங்கே நின்­று­கொண்­டி­ருந்தார்.

இதன்­போது அவர் மேலும் ஊட­கங்­க­ளிடம் கருத்து வெளி­யி­டு­கையில், 

ஒவ்­வொரு முறையும் ஐ.நா. பிர­தி­நி­திகள் வரும்­போது நான் எனது தந்­தைக்கு இழைக்­கப்­பட்­டுள்ள அநீதி தொடர்பில் முறை­யி­டு­வ­தற்கு வருவேன். ஆனால் அவர்கள் அதனை ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்கள். இதற்கு முன்னர் இலங்கை வந்த ஐ.நா. அதி­காரி பென் எமர்சன் எனது தந்­தையின் கைது தொடர்பில் மகிழ்ச்­சி­ய­டை­வ­தாக கூறி­யி­ருந்தார். என்­னு­டைய தந்தை குற்­றச்­சாட்­டுக்கள் இன்றி சிறையில் வைக்­கப்­பட்­டுள்ளார். தற்­போது 5 மாதங்­க­ளாக அவர் சிறையில் இருக்­கிறார். இந்­நி­லையில் இலங்கை வந்த ஐ.நா. குழு­வினர் புலிகள் இருந்த சிறைக்­கூ­டங்­களை சென்று பார்த்­தனர். ஆனால் எனது தந்தை தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருக்கும் வெலிக்­கடை சிறைச்­சா­லைக்கு செல்­ல­வில்லை. 

இரா­ணுவ வீரர்­களை இவர்கள் சென்று பார்க்­க­வில்லை. அது­மட்­டு­மன்றி நான் இவர்­க­ளிடம் எனது முறைப்­பாட்டை தெரி­விக்­க­வந்தேன். 

ஆனால் அத­னையும் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. இலங்கை அதி­காரி ஒரு­வரை அனுப்பி எனது முறைப்­பாட்டை பெற்­றுக்­கொண்­டனர். ஆனால் அது உரிய இடத்திற்கு போகுமா என்று தெரியவில்லை. என்னிடம் முதலில் வந்து புலி தரப்பா?   என்று கேட்டனர். நான் இல்லை இராணுவ தரப்பு என்றேன். உடனே எனது முறைப்பாட்டை ஏற்காமல் சென்றுவிட்டனர் என்றார். 

1 comment:

  1. இந்த செய்தியை வாசிக்கும் போது அது ஒருபக்கச் சார்பான செய்தியாகத் தெரிகிறது. உண்மை தெரியாமல் எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாது. ஆனால் ஐ.நா. அதிகாரிகள் இந்தப் பெண் கூறுவது போல் தெரிவித்திருந்தால் அது தவறு ஒரு தலைப்பட்சமான போக்கு எனக்கூறலாம். இந்தச் செய்தியின் உண்மைத்தன்மை தெரியாமையால் முடியுமாக இருந்தால் இந்தச் செய்தியின் உண்மைத்தன்மையை ஊர்ஜிதம் செய்து பிரசுரித்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.