Header Ads



யாராவது வங்கி கடன் அட்டையை, வழங்குமாறு கோரினால் வழங்க வேண்டாம்

இலங்கையில் போலி கடன் அட்டைகளை பயன்படுத்தி பல பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற பணம் மோசடி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மோசடி சம்பவம் தொடர்பில் மூவர் குற்ற விசாரணை திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மோசடியாளர்கள் வாடகைக்கு பெற்றுக் கொண்ட வேனில் சென்று கடன் அட்டைகளை பயன்படுத்தி பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடிக்கின்றனர். அவர்கள் வங்கி அதிகாரிகள் போல் சென்றே இந்த மோசடியில் ஈடுபடுகின்றனர்.

வங்கிகளுக்கு வெளியே இருக்கும் மோசடியாளர்கள் பணம் பெற்றுக் கொள்ள வரும் வாடிக்கையாளர்களை தவறான வழியில் அனுப்பி அவர்களிடம் உள்ள கடன் அட்டைகளை சோதனையிட வேண்டும் என கூறி பெற்றுக் கொள்கின்றார்கள். குறித்த வங்கி ATM இயந்திரத்தில் சில வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது எனவும், ஸ்கிமர் டிவைஸ் என்ற சிறிய இயந்திரம் ஒன்றை பயன்படுத்தி கடன் அட்டைகளின் தகவல்களை பெற்றுக் கொள்வதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பெற்றுக் கொள்ளப்படும் தகவல்களை பயன்படுத்தி போலி கடன் அட்டைகள் தயாரிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோசடி நடவடிக்கையின் மூலம் 7 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வங்கி கடன் அட்டையை வழங்குமாறு கோரினால் வழங்க வேண்டாம் என பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.