Header Ads



முல்லைத்தீவு கடற்பரப்பில் ஏற்படும், மாற்றங்களை கண்டு அச்சப்படத் தேவையில்லையாம்..!


முல்லைத்தீவு கடற்பரப்பில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கரையோரப் பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.

கடற்பரப்பின் நீரோட்டத்தில் வித்தியாசம் தென்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, அச்சம் காரணமாக முல்லைத்தீவு நகர்ப்புறம், கள்ளப்பாடு, சிலாவத்தை, தீர்த்தக்கரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள், இரவு வேளையில் முள்ளியவளை பகுதியில் இருக்கும் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று தங்கிவிட்டு காலையில் தமது வீடுகளுக்கு திரும்புகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் சுனாமி குறித்து தகவல்கள் பகிரப்படுவதால் தாம் அவ்வாறு செய்வதாக மக்கள் கூறினர்.

எவ்வாறாயினும், கடலின் மாற்றம் சுனாமிக்கான அறிகுறி இல்லை எனவும் மழைக்காலங்களில் இவ்வாறான நிலை ஏற்படும் எனவும் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் க. அருளாணந்தம் தெரிவித்தார்.

1 comment:

  1. (கப்பலில் செல்லும்) அவர்களை, மலைமுகடுகளைப் போன்ற அலை சூழ்ந்து கொள்ளுமானால், அல்லாஹ்வுக்கே வழிபட்டு அந்தரங்க சுத்தியுடன் அவனிடம் பிரார்த்திக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களைக் காப்பாற்றிக்கரைசேர்த்து விட்டால், அவர்களில் சிலர் நடுநிலையாக நடந்து கொள்கிறார்கள் - எனினும் மிகவும் நன்றி கெட்ட, பெருந்துரோகிகளைத் தவிர வேறு எவரும் நம் அத்தாட்சிகளை நிராகரிப்பதில்லை.
    (அல்குர்ஆன் : 31:32)

    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.