Header Ads



பொலிசாரின் தடைகளைத் தாண்டி, சாய்ந்தமருதில் பாரிய வாகனப்பேரணி!!!


-எம்.வை.அமீர்-

எஞ்சிய உள்ளுராட்சி சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று -21- வியாழக்கிழமை நண்பகலுடன் நிறைவுற்றது.

உள்ளுராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் சார்பாக சுயற்சைக் குழு வேட்பு மனுவை ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் வை.எம். ஹனிபா அம்பாறை மாவட்ட கச்சேரியில்  தாக்கல் செய்திருந்தார்.

வேட்பு மனுவை தாக்கல் செய்ததன் பின்னர் வாகன பவனியாக சாய்ந்தமருதை நோக்கி வருகை தந்த சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் சார்பாக சுயற்சைக் குழுவினரை மாளிகைக்காடு சந்தியில் இடைமறித்த பொலிசார், பிரதான வீதியூடாக ஊர்வலம் செல்வதைத் தடுத்தனர்.

பின்னர் குறித்த வாகன ஊர்வலம் மாளிகா வீதியூடாக கடற்கரை வீதியை அடைந்து சாய்ந்தமருதின் உள் வீதிகளை பவனிவன்தது.

கல்முனை மாநகர சபைக்கு 40 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக ஒன்பது அரசியல் கட்சிகளும் ஆறு சுயற்சை குழுக்களும் போட்டியிடுகின்றன.

ஒரு இரட்டை தொகுதி அடங்களாக 23 வட்டாரங்களைக் கொண்ட கல்முனை மாநகர சபைக்கு  40 உறுப்பினர்களை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதோடு காரைதீவு பிரதேச சபைக்கு சாய்ந்தமருது பள்ளிவாசல் சார்பாக போட்டியிடும் சுயற்சைக் குழுவுக்கும் தோடப்பழச் சின்னமும் கல்முனை மாநகரசபைக்கு போட்டியிடும் இவர்களது குழுவுக்கும் தோடப்பழச் சின்னம் கிடைத்திருப்பது என்பது விஷேட அம்சமாகும்.

No comments

Powered by Blogger.