Header Ads



தலபுட்டுவ யானையை கொன்றவர்களை, தூக்கிலிட வேண்டும் - சஜித்

தலபுட்டுவா என்றழைக்கப்படும் யானையை கொன்றவர்களை தூக்கிலிட வேண்டுமென வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வீடமைப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர், வனவிலங்குப் பாதுகாப்பு அமைச்சரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வனவிலங்கு சட்டத்தை மாற்றியமைத்தேனும் யானையைக் கொன்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

யானைகளை கொல்பவர்களுக்கு தற்போதைய சட்டத்தின் அடிப்படையில் சிறிய சிறைத்தண்டனையும் சிறுதொகை அபராதமுமே விதிக்கப்படுகின்றது.

இதனால் சிறையிலிருந்து மீண்டும் மீளவும் அதே தவறை இழைக்கின்றார்கள். வனவிலங்கு சட்டத்தை மாற்றியமைத்து தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

தலபுட்டுவா யானையை கொன்றவர்களுக்கு மரண தண்டனை விதித்தால் ஏனைய யானைகளை பாதுகாக்க முடியும் என அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. I never heard him when recent Ginthota was attached by tugs he didn't speak a single word, not only that in many occasions when humans in danger he never speak, now he is speaking about elephants. At least he is try to protect Eliphant!! Soon he will talk about stray dogs and cows.

    ReplyDelete
  2. யானைக்குமட்டுமல்ல மனிதனை கொண்றாலும் மரணதண்டனை கொடுங்கள், திருட்டுக்கு கையையும் வெட்டி, கலவரத்தை தூண்டினால், விபச்சாரத்தில் ஈடுபட்டால் ஓடவிட்டு சுட்டுத்தள்ளுங்கள். குற்றங்கள் சரமாரியாக குறையும்...

    ReplyDelete

Powered by Blogger.