Header Ads



இலங்கையை திறந்த பொருளாதார, நாடாக கொண்டுவருவேன் - ரணில் அடம்பிடிப்பு

“கடந்த கால படிப்பினையைக் கொண்டு, இலங்கையை மீண்டும் வெற்றிகரமான திறந்த பொருளாதாரத்தையுடைய நாடாக கொண்டுவருவோம்” என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம்,நெதர்லாந்து,ஜேர்மன் தூதுவராலயம் மற்றும் பிரித்தானிய கவுன்சில் இணைந்து  ஏற்பாடு செய்திருந்த “நேரடி பாரம்பரியம்” நிகழ்வு, கொழும்பு கிரேன்ட் ஹொட்டலில் இன்று (13) இடம்பெற்றது. இதில்  கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“தூபாராம ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம், இலங்கையில் கட்டடம் தொடர்பான வரலாறு ஆரம்பமாகின்றது. அன்றிலிருந்து ரஜரட்டவை மையப்படுத்தி எமது நாட்டில் நவீன நாகரீகம் தோற்றம் பெற்றது.

“அதேபோல் தம்பதெனி யுகத்திலிருந்து பிரித்தானியா யுகம் வரை அமைக்கப்பட்ட பல கட்டடங்கள் பல இலங்கையின் தெற்கின் பல பிரதேசங்களில் உள்ளன. இவை அனைத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும்.

“கொழும்பில் அமைந்துள்ள பல கட்டடங்கள் ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியர்களால் அமைக்கப்பட்டது. கடந்த காலத்தில் ஆசியாவுக்கு நவீன வியாபார முறையை அறிமுகப்படுத்தியது இலங்கையாகும். இலங்கையை கேந்திரமாகப் பயன்படுத்தி டச்சு சட்டத்தை நடைமுறைப்படுத்தி ஐரோப்பிய வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டது. 1960 ஆண்டு வரை இலங்கை ஆசியாவின் பிரதான நாடாக கருதப்பட்டது. அந்தக் காலத்தில் அமைக்கப்பட்ட பல கட்டடங்கள் இன்றும் நல்ல நிலையில் உள்ளதால் நாம் அவற்றையும் பாதுகாக்க வேண்டும்.

“எனவே, கடந்த காலம், தற்காலத்திலும் பெறுமதியான சகல கட்டடங்களையும் பாதுகாப்பதற்கும், அதன்மூலம் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்க்கின்றோம். அதேபோல், இலங்கையின் கடந்த காலத்தைப் பாதுகாத்து, அந்த கடந்த காலத்தைப் படிப்பினையாகக் கொண்டு, வர்த்தகத்துக்கு பயப்படாத மக்களாகவும், இலங்கையை மீண்டும் வெற்றிகரமான திறந்த பொருளாதாரத்தையுடைய நாடாகவும் கொண்டுவருவதற்கு செயற்படுவோம்” எனத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.