Header Ads



காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம்...!


தற்போது நாட்டின் பல பகுதிகளில் நிலவிவரும் அசாதாரண காலநிலை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு பல கஷ்டங்களுக்கும் துயரங்களுக்கும் முகம்கொடுத்து வருகின்றனர். 10க்கும் அதிகமானோர் மரணித்தும் 20,000க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

இது போன்ற சந்தர்ப்பங்களில் தொழுகை, துஆ, பாவமன்னிப்புத் தேடுதல் போன்ற வணக்க வழிபாடுகளில் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஈடுபடுவார்கள். அதனடிப்படையில் அல்லாஹ்வின் அன்பையும் றஹ்மத்தையும் நெருக்கத்தையும் பெற்றுத்தரக் கூடிய வணக்க வழிபாடுகளில் ஈடுபடுமாறும் தற்போது நிலவும் அசாதாரண காலநிலை நீங்கி பொதுமக்கள் தமது வழமைக்குத் திரும்புவதற்காக பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கின்றது.

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது மாவட்ட, பிரதேச கிளைகளையும் மஸ்ஜித் நிர்வாகிகளையும் ஏனைய அமைப்புகளையும் பொதுமக்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றது. 
வஸ்ஸலாம்.

அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர்
செயலாளர் - சமூக சேவைப் பிரிவு 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments

Powered by Blogger.