Header Ads



தெற்காசிய நாடுகளில், இலங்கையிலேயே குறைவான தாய் மரணங்கள்

தாய், சேய் மரண புள்ளிவிபரங்களின் அடிப்படையில், கடந்த 2016ஆம் ஆண்டில் 112 தாய் மரணங்கள் நடந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு அமைய பிரசவத்தின்போது நடந்த தாய் மரணங்களின் புள்ளிவிபரங்களுக்கு அமைய 33.8 வீத குழந்தை பிறப்புகள் கணக்கிடப்பட்டுள்ளன.

தெற்காசிய நாடுகளில் இலங்கையிலேயே குறைவான தாய் மரணங்கள் நடந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

68 வீதமான தாய் மரணங்கள் பல்வேறு மட்டத்திலான தாமதங்கள் காரணமாக நடந்துள்ளன.

43 வீத மரணங்கள் சரியான நேரத்திற்கு மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளாமை மற்றும் வைத்தியசாலைக்கு செல்லாத காரணத்தினால் ஏற்பட்டுள்ளன.

சுகாதார பணியாளர்களின் தாமதங்கள் 44 தாய் மரணங்கள் ஏற்பட நேரடியான மற்றும் மறைமுக காரணங்களாக அமைந்துள்ளன.

இந்த மரணங்களில் 55 வீதமான மரணங்கள் தவிர்த்திருக்கப்பட வேண்டிய மரணங்கள் எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

1 comment:

  1. இந்த 44% சுகாதார பணியாளர்களின் தாமதத்தினால் ஏற்பட்ட 44% மரணத்திற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா?

    ReplyDelete

Powered by Blogger.