Header Ads



டிரம்பின் நகர்வுக்கு, அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு


டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு அமெரிக்க தூதரகத்தை நகர்த்துவதற்கு திங்கள்கிழமை கையெழுத்திடுவதற்கு இருந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் இன்னும் கையெழுத்திடவில்லை.

இந்நிலையில் சர்வதேச எதிர்வினைகள் வெளியாகியுள்ளன

அரபு ஒன்றிய நாடுகள்: "பின்விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்தான நடவடிக்கை என்று அரபு ஒன்றிய நாடுகளின் தலைவர் அஹமத் அபூல் கெய்ட் தெரிவித்திருக்கிறார்.

சௌதி அரேபியா: இஸ்ரேல்-பாலத்தீன மோதலில் இறுதி தீர்வு ஏற்படும் முன்னால் எடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கை அமைதி முயற்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பாலத்தீனம்: அமெரிக்காவின் இத்தகைய முடிவு அமைதி முயற்சியை அழித்துவிடும் என்று கூறி உலக நாடுகளின் தலைவர்கள் இதில் தலையிட வேண்டும் என்று பாலத்தீனத்தின் அதிபர் முகமத் அப்பாஸ் கோரியுள்ளார்.

ஜோர்டன்: ஜெருசலேமிலுள்ள இஸ்லாமிய புனித இடங்களின் பாதுகாப்பாளராக இருக்கும் ஜோர்டன், மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.

3 comments:

  1. பாலத்தீனம்: அமெரிக்காவின் இத்தகைய முடிவு அமைதி முயற்சியை அழித்துவிடும் என்று கூறி உலக நாடுகளின் தலைவர்கள் இதில் தலையிட வேண்டும் என்று பாலத்தீனத்தின் அதிபர் முகமத் அப்பாஸ் கோரியுள்ளார்.

    இலங்கை: ??????

    ReplyDelete
  2. இதில், இலங்கை அரசாங்கம் யாருக்கு ஆதரவு?

    இலங்கையின் மனித உரிமைகளை முன்னேற்ற பாடுபடும் அமேரிக்காவிற்கா?, அல்லது ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவளித்து தோற்ற அரேபிய முட்டாளுகளுக்கா?

    ReplyDelete
    Replies
    1. Manitha inathai ulaham muluthum kolai seiya thudikkum, USA idam manitha neyathai ethirpaarkiraar Antony muttaal

      Delete

Powered by Blogger.