Header Ads



தாருன் நுஸ்ரா அநாதை இல்லத்தில், ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புகிறேன்

-Raazi Muhammadh Jaabir -

டாக்டர் மரீனா தாஹா ரிபாய்க்கு, 

கதையொன்று சொல்கிறேன் கேளுங்கள்.

சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர்  ஒரு வாலிபன் உங்கள் தாருன் நுஸ்ராவின் வாசற்கதவை வந்து தட்டினான்.

ஒரு பெண்மணி கதவைத் திறந்தார். அப்பொழுது தாருன் நுஸ்ரா தெஹிவளை ஸ்டேஷன் வீதியில் இருந்தது.

அந்த இளைஞன் அவனது பெயரைச் சொன்னான். ’’நான் உங்கள் அநாதை விடுதியில் இருக்கும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை அப்பெண் ஒரு ஹாபிழாவாகவும் மௌலவியாவாகவும் இருக்க வேண்டும் என்றான் அந்த இளைஞன்.

‘மாஷா அல்லாஹ்.நல்ல விடயம்.உங்கள் தொலைபேசி இலக்கத்தைத் தாருங்கள்.தாம் தொடர்பு கொள்கிறோம் என்றார் அப்பெண்மணி.

சில நாட்கள் கழித்து அந்த இளைஞனுக்கு தாருன் நுஸ்ராவில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அந்த இளைஞனின் நிபந்தனைக்கேற்ப ஒரு பெண் இருப்பதாகக் கூறினார்கள்.

அந்த இளைஞன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்தான். அன்று அவனது சொந்தங்கள் என்று அவனுக்கிருந்தது தாருன் நுஸ்ராவின் அந்த அனாதைகள்தான்.

ஒவ்வொரு நாளும் அவன் தனது மனைவியைக் கூட்டிக் கொண்டு தாருன் நுஸ்ராவிற்குச் செல்வான். அங்கிருக்கும் அனாதைக் குழந்தைகளின் கதைகளைக் கேட்டு,அவர்களின் ஏழ்மையைக் கேட்டு, அவர்கள் வாழ்வில் பட்ட துயரங்களைக் கேட்டு அந்த இளைஞன் அதிகம் அழுதிருக்கிறான்.

அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.அந்தக் குழந்தை மாலை நேரங்களில் தாருன் நுஸ்ராவின் அனாதைக் குழந்தைகளின் மடிகளில் வளர்ந்து வந்தது. அந்தக் குழந்தையின் சொந்தங்களும் அந்த அனாதைகள்தான்.

அந்த இளைஞனுக்கு தாருன்னுஸ்ராவில் எத்தனை கதவுகள் இருந்தன.அதில் எத்தனை பூட்டுகள் இருந்தன வரைக்கும் அனைத்தும் தெரியும்.

சில காலங்களுக்கு பின்னர் அந்த இளைஞன் கொழும்பை விட்டுச் சென்று விட்டான். தூரத்தில் ஒரு ஆற்றங்கரையில் ஆளரவம் இல்லாத ஒரு  இடத்தில் அவனது மனைவியோடும் குழந்தைகளோடும் அவன் வாழ்ந்து வருகிறான்.

எந்த அனாதை இல்லத்தில் இருந்து தனது மனைவியை அவன் அழைத்து வந்தானோ அந்த அநாதை இல்லத்தில் பாலியல் துஷ்பிரயோகம் நடந்திருக்கிறது என்று கேள்விப்பட்டதும் அந்த இளைஞன் இடிந்து விழுகிறான். அவனது இதயம் விம்மி வெடிக்கிறது.

அனாதாரவான வாழ்வின் வலியை அவன் ஒவ்வொரு இரவும் கண்ணீரோடு கேட்டிருக்கிறான். அநாதையின் வலி அவனுக்கு நன்றாகப் புரியும்.ஏழ்மை எத்தனை கொடியது என்பதையும் அவன் நன்கறிவான்.

அந்த இளைஞன் யார் தெரியுமா மரீனா ரிபாய் அவர்களே,

அந்த இளைஞன் நான்தான்.இது எனதும் எனது மனைவினதும் கதைதான்.

அந்த அனாதைகளின் மடியில் வளர்ந்த குழந்தை எனது மூத்த மகள்தான்.

ஆகவே மரீனா அவர்களே உண்மை தெரியாமல் பேசுகிறார்கள். தாருன் நுஸ்ராவின் சொத்துக்களை அபகரிப்பதற்காக மனீஷா என்ற பெண் இதனை இட்டுக்கட்டி இருக்கிறார், இது ஷீயாக்களின் சதி என்று நடந்த உண்மையை உங்கள் கௌரவங்களுக்காக மூடி மறைக்கப்பார்க்காதீர்கள்.

இன்று அந்த அநாதைக் குழந்தைகளிடம் பாலியல் துஷ்பிரயோகம் நடந்திருக்கிறது. 
ஒரு 12 வயதுக் குழந்தை கர்ப்பழிக்கப்பட்டிருக்கிறாள். 

அரச வைத்தியசாலை ஆவணம் ‘கற்பழிப்பு” என்று எழுதித் தந்திருக்கிறது. குழந்தைகள் ஆடைமாற்றும் இடத்தில் cctv கெமெரா வைக்கப்பட்டிருக்கிறது. இதை விட என்ன ஆதாரம் வேண்டும் உங்களுக்கு.

அவதூறு பேசுகிறீர்கள் மறுமையைப் பயந்து கொள்ளுங்கள் என்று நீங்கள் எந்த றப்பைப் பற்றி எச்சரித்தீர்களோ அந்த றப்பின் அர்ஷைப் பிடித்துக் கொண்டு நானும் எனது மனைவியும் அந்த அப்பாவி அனாதைக் குழந்தைகளும் உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்வோம்.

அநாதைகளின் பொறுப்புதாரி என்றால் என்ன என்று தெரியுமா உங்களுக்கு டாக்டர் அவர்களே? 

இனி வழக்கு அந்த துஷ்டனுக்கு அல்ல. அநாதைகளின் பொறுப்புதாரியாக இருந்த உங்களுக்கு.

அனாதரவான அநாதைகளின் வாழ்வோடு விளையாட நினைப்பவர்களுக்கு நீங்கள் இனி ஒரு பாடமாவீர்கள்.

டாக்டரே, இந்த ஏழை இளைஞனின் கதை உங்களுக்கு இனிக்கிறதா இல்லை உறைக்கிறதா?

இப்பொழுது சொல்லுங்கள்.அந்த அனாதைகளுக்காக நீங்கள் மூடி மறைக்கும் உண்மையைப் பேச நான் தகுதியானவனா?தகுதியற்றவனா?


5 comments:

  1. ஜப்னா நியூஸுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். இந்த துரதிருஷ்டவசமான செய்தியாக இருந்தால் அதன் உண்மை நிலைமையை வாசகர்களுக்கு அறியத்தருவீர்களா. என்ன இருந்தாலும் இதில் எந்தச் செய்தியையும் நாம் நேரடியாக நம்பத்தயாரில்லை. ஒரு சிங்கள இணையத்தளத்தில் வௌியான உடனே அதை தமிழ் வடிவுக்கு எடுத்து அவசரமாக இணையத்தளத்தில் வௌியிட்டுவிட்டால் அது உண்மையாகாது. ஓரிரு நாட்களின் பின் அதுபிழை என ஒன்றல்ல பல தளங்களே பிரசுரிக்கும் காலம் இது. மேலும் டாக்டர் மரீனா அவரகள் சரியாக நடந்து கொண்டாரா இல்லையா என்பது சட்டம் தீர்மானிக்கும். அவரிடம் உதவிபெற்றவர்கள் கூட இவ்வாறு ஒரு பெண்மீது குற்றம் சாட்டுவது கூடுமா கூடாதா என்பது அந்த செய்தியை வௌியிடுபவருக்கு நன்றாகத் தெரியும் கீழ்வரும் ஹதீஸை சற்று கவனமாக வாசித்து விளங்கிக் கொள்ளவும். عَنِ ابْنِ عَبَّاسٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " مَنْ سَتَرَ عَوْرَةَ أَخِيهِ الْمُسْلِمِ ، سَتَرَ اللَّهُ عَوْرَتَهُ يَوْمَ الْقِيَامَةِ ، وَمَنْ كَشَفَ عَوْرَةَ أَخِيهِ الْمُسْلِمِ ، كَشَفَ اللَّهُ عَوْرَتَهُ حَتَّى يَفْضَحَهُ بِهَا فِي بَيْتِهِ " . இந்த வாசகத்தை அப்படியே பிரசுரிக்குமாறு இணையத்தளத்துக்குப் பொறுப்பானவர்களிடம் பணிவாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் சரியாக சொல்லி விட்டீர்கள்.

      Delete
  2. Examplary Excellent move by brother Raazi . But we shouldnt jump the gun benifit of the doubt should b given to Dr.Mareena who deserves all kind of backing as a wellknown figure. No any smear campaign pls.

    ReplyDelete
  3. If the residents were really abused, sexually or otherwise whoever responsible should be punished according to the law. But I do not understand why the writer bringing Shia Sunni dispute into this.

    ReplyDelete
  4. Let the court give its verdict on this issue. Even having a tiny bit of doubt about someone in our minds is dangerous according to our faith.

    ReplyDelete

Powered by Blogger.