Header Ads



தேங்காய் பற்றி பிரதமர், வௌியிட்ட தகவல்

இலங்கையில் தேங்காய் உற்பத்தி வழமை நிலைக்குத் திரும்ப, 2019 அல்லது 2020 ஆம் ஆண்டாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இரத்தினப்புரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் பொருட்களின் விலைகள் சாதாரணமாக உயர்வடையும்.

இதனால், வீட்டு வருமானத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

மழைவீழ்ச்சியை நம்பியே விவசாய செய்கை இடம்பெறுகிறது.

எனினும், தற்போது காலநிலையில் நிலவுகின்ற சமநிலையற்ற தன்மை காரணமாக எதிர்பார்க்கப்படும் அளவுக்கு மழைவீழ்ச்சி கிடைப்பதில்லை.

இதனால், உணவு உற்பத்தி குறைவடைந்துள்ளதால், பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரதமர் கூறியுள்ளார்.

எனினும், தேங்காய் இறக்குமதி செய்வதற்கு விவசாய அமைச்சால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனால், தேங்காயை இறக்குமதி செய்ய முடியாது.

இந்த நிலையில், இலங்கையில் தேங்காய் உற்பத்தி வழமை நிலைக்குத் திரும்ப, 2019 அல்லது 2020 ஆம் ஆண்டாகும்.

எனவே, அதுவரை எடுக்கவேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏனைய துறைகளில் நியாயமான விலைக்குப் பொருட்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாவும் அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.