Header Ads



குத்ஸ் எமது, கண் குளிர்ச்சி - துருக்கிய ஜனாதிபதி


-Mohamed Basir-

குத்ஸ் குறித்து துருக்கிய ஜனாதிபதி,

குத்ஸ் நகரம் குறித்த ட்ரம்பின் தீர்மானம் தவறானது. அது சர்வதேச சட்டங்களுக்கு புறம்பானது. இஸ்ரேல் ஒரு காலனித்துவ, ஆக்கிரமிப்பு நாடு. அது பலஸ்தீனை ஆக்கிரமித்து அதன் நிலங்களை சுவீகரித்துள்ளது.

1948 ஆம் ஆண்டு முதல் பலஸ்தீனிடமிருந்து மிக விசாலமான நிலப்பரப்புக்கள் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டுள்ளன. மிகப் பெருமளவில் விசாலிக்கப்பட்டே அது இன்றுள்ள நிலைமையை அடைந்துள்ளது.

குத்ஸ் பற்றிய அமெரிக்காவின் தீர்மானம் சர்வதேச சட்டங்களுக்கும், மனச்சாட்சிக்கும், பிராந்தியத்தின் சமகால நிலைமைக்கும் புறம்பானவையாகும்.

பலஸ்தீன் மிகத் தெளிவாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஒரு தேசம்.

குழந்தைகள் மீதும், காஸா மீதும் இஸ்ரேல்  தாக்குதல் நடாத்திவிட்டு நாம் தாம் பலசாலிகள் என்று பீத்திக் கொள்கிறது. அப்படி கூறுவதற்கு அது தகுதியானதல்ல.

குத்ஸ் எமது கண் குளிர்ச்சி. எமது முதல் கிப்லா. எம்மைப் பொறுத்தவரையில் குத்ஸில் கைவைப்பதானது அதி உச்சபட்ச ஆபத்தான விடயம் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

1967 ஆம் ஆண்டு முதல் சட்டங்களை பொருட்படுத்தாமலும் பண்பாடற்ற வகையிலும் பலஸ்தீன நிலங்களை சூரையாடிவரும் ஆக்கிரமிப்பு நாடொன்றிடம் குத்ஸின் முடிவை விட்டுவிட முடியாது. இது காட்டு ஓநாய்களிடம் ஆட்டுக்குட்டியை ஒப்படைப்பதற்கு ஒப்பானதாகும்.

ட்ரம்ப் களத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்புகிறார். உலகத்தை முகாமைசெய்வது அவ்வளவு சுலபமானதல்ல.

நீங்கள் பலசாலியாக இருக்கலாம். அதற்காக இந்த உரிமையெல்லாம் உமக்கு கிடையாது. பெரும் பெரும் நாடுகளின் பணி சமாதானத்தை உருவாக்குவதே. போராட்டங்களை தூண்டிவிடுவதல்ல.

turkey-post.net

No comments

Powered by Blogger.