Header Ads



அரசாங்கம் பதற்றமடைந்து, குழப்படைந்து இருக்கும் நேரமிது - ஜனாதிபதி மைத்திரி

புதிய நியமனங்களை பெற்று கடமைகளை ஆரம்பிக்கும் போது நிறுவன உரிமையாளர்களின் சட்டை பைக்குள் விழுவதா அல்லது உழைக்கும் மக்களின் இதயங்களில் இடம்பிடிப்பதா என்பது குறித்து தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 191 புதிய தொழில் அதிகாரிகளுக்கு நியமன கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தேசிய பொறுப்பு வாய்ந்த தொழிலுடன் நீங்கள் உங்களது வாழ்க்கையின் தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்ற போகிறீர்கள்.

புதிய நியமனங்களை பெற்ற நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றீர்கள் என எண்ணுகிறேன். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் இந்த நாட்டின ஒரு தரப்பினர் தற்போது மகிழ்ச்சியின்றி இருப்பது தெரியுமா?.

இயற்கை அனர்த்தங்கள், வெள்ளம், காற்று போன்ற அனர்த்தங்களால் சிலரின் உயிர்கள் பறிபோயுள்ளன. இன்னும் சிலர் சொத்துக்களை இழந்துள்ளனர்.

இது தொடர்பாக அரசாங்கம் பதற்றமடைந்து குழப்படைந்து இருக்கும் நேரமிது. அவர்களின் துயரத்தில் நாமும் பங்கேற்க வேண்டும். அரசாங்கம் என்ற வகையில் அவர்களின் நலன்புரிக்கான அனைத்தையும் நாங்கள் செய்வோம்.

தேசிய இடர்கள் ஏற்படும் போது முப்படையினர் உட்பட பொலிஸ் அதிகாரிகளின் சேவைகளை நாம் பாராட்ட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.