Header Ads



வீடுகளில் வேலைசெய்து, கொள்ளையர்களுக்கு தகவல் வழங்கிய பெண் கைது

யாழ். புறநகர் பகுதிகளில் பகல் வேளைகளில் வேலைகாரியாகவும் , இரவு வேளைகளில் இன்போர்மராகவும் செயற்பட்ட பெண் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்கானை கட்டுடை பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 20 வயது இளைஞர்களே மானிப்பாய் இவ்வாறு காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் சங்கானையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் , சுதுமலையில் மதகுரு வீட்டில் இடம்பெற்ற நகை மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் , வட்டுக்கோட்டையில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற திருட்டு ஆகிய சம்பவங்களுடன் குறித்த கும்பலுக்கு தொடர்பு உள்ளது. முன்னதாக கைது செய்யப்பட்ட குறித்த பெண் வயோதிபர்கள் வாழும் வீடுகளுக்கு சென்று வீட்டு வேலை செய்யவதற்கு என வேலைக்கு சேர்ந்து கொள்வார்.

அங்கு வீட்டு வேளைகளில் ஈடுபட்டுக்கொண்டு வீட்டில் பணம் , நகை என்பவற்றை வைக்கும் இடங்களை கண்காணித்து அது தொடர்பில் தன்னுடன் தொடர்பில் உள்ள திருடர்கள் , கொள்ளையர்களுக்கு தகவல்கள் வழங்குவார். குறித்த பெண் வழங்கிய தகவலின் பிரகாரம் திருடர்கள் கொள்ளையர்கள் அந்த வீடுகளில் இறங்கி திருட்டு மற்றும் கொள்ளைகளில் ஈடுபடுவார்கள். பின்னர் தாம் திருடிய மற்றும் கொள்ளையடித்த நகை பணத்தில் தகவல் தந்த குறித்த பெண்ணுக்கு பங்கு கொடுப்பார்கள்.

அந்நிலையில் குறித்த பெண் தொடர்பில் எமக்கு கிடைத்த இரசிய தகவலின் அடிப்படையில் பெண்ணை கைது செய்தோம். கைது செய்த பெண்ணிடம் இருந்து 2 தங்க சங்கிலிகள் , மற்றும் மோதிரம் ஒன்று என்பன மீட்கப்பட்டு உள்ளன. மானிப்பாய் காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.