Header Ads



ரணில் செய்த, நல்ல காரியம் (முஸ்லிம் உம்மாவின் கவலையை, அமெரிக்காவுக்கு விளக்கினார்)

இஸ்­ரேலின் தலை­ந­க­ராக ஜெரு­ச­லே த்தை அறி­வித்­த­மை­யினால் மத்­திய கிழக்கு நாடு­களின் அமைதி நட­வ­டிக்­கை­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டலாம் என அர­சாங்கம் அமெ­ரிக்­கா­விற்கு அறி­வித்­துள்­ளது. 

இது குறித்த அறி­விப்பை பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூதுவர் அதுல் கேஷா ப்பை அழைத்து உத்­தி­யோ­க­பூர்­வ­மாக விடுத்­துள்ளார்.

அல­ரி­மா­ளி­கையில் இந்த சந்­திப்பு இடம்­பெற்­றது. மத்­திய கிழக்கு நாடு­களின் அமைதி தொடர்பில் இல ங்கை கரி­ச­­னை­யுடன் உள்­ளது. எனவே இஸ்­ரேலின் தலை­ந­க­ராக ஜெரு­ச­லத்தை அறி­வித்­துள்­ள­மையின் ஊடாக அந்த நாடு­களின் அமை­திக்கு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது என்று பிர­தமர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். 

ஜெரு­ச­லத்தை இஸ்­ரேலின் தலை­ந­க­ராக அங்­கீ­க­ரிக்கும் அறி­விப்பை, அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனல்ட் டிரம்ப் அண்­மையில் வெளி­யிட்டார். இத­னை­ய­டுத்து இலங்கை உள்­ளிட்ட உல­க­ளா­விய ரீதியில் முஸ்­லிம்கள் அதி­ருப்­தியை வெளி­யிட்டு போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தனர். 

சர்ச்­சைக்­கு­ரிய ஜெரு­சலம் நகரை இஸ்­ரேலின் தலை­ந­க­ராக அங்­கீ­க­ரிக்கும் அறி­விப்பை அமெ­ரிக்க அதிபர் டிரம்ப் வெளி­யிட்­ட­துடன் ஜெரு­சலம் நகரில் அமெ­ரிக்­காவின் புதிய தூத­ரகம் 2 ஆண்­டு­க­ளுக்குள் அமைக்­கப்­படும் எனவும் அறி­வித்தார். இதன் பின்னர் நிலைமை மொச­ம­டைந்­த­துடன் ஐ நா பாது­காப்பு சபை அவ­ச­ர­மாக கூடி இந்த விடயம் குறித்து ஆராய்ந்­தது.   

இந்­நி­லையில் இலங்கை தனது நிலைப்­பாட்டை அமெ­ரிக்­கா­விற்கு அறி­வித்­துள்­ளது. மத்­திய கிழக்கு நாடு­களின் அமை­திக்கு சவாலானதாகவே இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அறிவித்தமை அமைந்துள்ளது. எனவே இந்த விடயத்தில் மீண்டும் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.  

2 comments:

  1. தேர்தல் வருகின்றன முஸ்லீம்களின் வாக்கு வேண்டும்

    ReplyDelete
  2. This is a soft toned condemnation. He should have condemned the move outright instead of saying it would interrupt the peace process.
    As Mustafa Jawfer says, it is an eye wash because of the upcoming election.

    ReplyDelete

Powered by Blogger.