December 24, 2017

நிர்வாணப் படம் பார்த்தவரின் திடீர் வபாத் - அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து காப்பாற்றுவது எப்படி...?


எனக்கு நன்கு அறிமுகமான ஒருவரின் மகன், திடீரென மரணித்து விட்டார். திருமணமாகவர். எந்த நோயும் இருக்கவில்லை. இரவு உறங்கியவர், காலையில் விழிக்கவில்லை.கதவை உடைத்து அறைக்குள் சென்று பார்த்த போது மரணமாகி இருந்தார்.

ஜனாஸாவை நான்தான் தொழுவித்தேன்.அடக்கம் முடிந்ததும் ஆறுதல் சொல்வதற்காக அவரின் வீடு சென்றேன்.தனியாக என்னுடன் பேசவேண்டுமெனக் கூறி,மகன் மரணித்த அறைக்குள் என்னை அழைத்துச் சென்றார் தந்தை.கதவைத் தாழிட்டு விட்டு என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி அழுதார்.பிறகு,அழுது கொண்டே, ஹழ்ரத்!

என்னுடைய மகனின் மவ்த்து மோசமான விதத்தில்தான் நடைபெற்றுள்ளதாக அறிகிறேன். அவன் ஈடேற்றமடைய ஏதாவது வழி சொல்லுங்கள் ஹழ்ரத்! என்று கதறினார்.

வழமையாக அவன் இரவு 10.00 மணிக்கு உறங்கச் சென்று விடுவான் சூரிய உதயத்திற்கு சற்றுமுன் எழும்பி, சுபஹு தொழுவான் பாங்கு சொன்னதும் பள்ளிவாயலுக்குப் போக எவ்வளவுதான் எழுப்பினாலும் எழும்ப மாட்டான்.

அன்றும் அவ்வாறுதான் 6.00 மணியாகியும் எழும்ப வில்லை கதவைத்தட்டிப் பார்த்தேன்,உள்ளிருந்து எந்த சப்தமுமே இல்லை.பிறகு கதவை உடைத்தேன்.அவனோ கட்டிலில்,இரண்டு காதிலும் "இயர் போனை"மாட்டியவனாக மேல் நோக்கி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.வலது கை "ஹேண்ட் போனை"ப் பற்றிப்பிடித்திருந்தது.நான் உழுப்பி எழுப்பினேன்.எந்த அசைவுமே இல்லை.அவன் மரணித்திருந்தான்.உடல் விரைத்துப் போய் இருந்தது.

கையிலுள்ள "போனை"நான் மெதுவாகக் கழட்ட முயன்றேன்.மிகவும் இறுக்கமாகப் பற்றியிருந்தான்.ஒருவாராகப் போனைக் கழட்டினேன்.அதில்!!

மிகவும் ஆபாசமான நிர்வாணக்காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன.யாரும் அறிந்து கொள்ள முன்,அவசரமாக அதை off பண்ணிவிட்டேன்.அவனது உயிர், கடைசியாக அதைப் பார்த்த வண்ணமே பிரிந்திருக்குமென நினைக்கிறேன்.அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்ற ஏதாவது வழி சொல்லுங்கள் ஹழ்ரத்!"

மீண்டும் கதறி அழுதார்.

நான் ஆறுதல் கூறினேன்."அவருக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்வேறு எவரிடமும் இதைக் கூறாதீர்கள்"என்று கூறினேன்.

அடுத்தவர்களுக்குப் படிப்பினைக்காக ஊர் பெயர் கூறாமல்,சம்பவத்தை மாத்திரம் அறிவிக்க அவரிடம் அனுமதி பெற்றுக் கொண்டேன்.

பெற்றோர்களே❗

அறையை மூடிக்கொண்டு உங்கள் அன்புச்செல்வங்கள், என்ன செய்கிறார்களென்பது உங்களுக்குத் தெரியாது.வாலிபப் பருவத்தின் உணர்ச்சிகளுக்கு மனம் அடிபணிந்து விடும்.தனிமை, அவர்களைப் பாவம் செய்யத் தூண்டும்.ஷைதான் அவர்களின் செயல்களை இன்பமாகக் காட்டுவான்.பொறுப்புடன் நாம் அவதானிக்கா விட்டால்,பாவத்தில் அவர்கள் இன்பம் காண ஆரம்பித்துப் பழகி விடுவார்கள்.உள்ளத்தையும் உடலையும் நாசமாக்கிக் கொள்வார்கள்.இம்மை மறுமையின் வேதனைகளை அவர்களே விலைக்கு வாங்கிக் கொண்டவர்களாவார்கள்.நாம் ஒவ்வொருவரும்,எமது பொறுப்பையுணர்ந்து, எமது அன்புச் செல்வங்களைப் பாதுகாப்போமாக.

அன்புடன், ஒரு ஆலிம்.

2 கருத்துரைகள்:

(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
(அல்குர்ஆன் : 24:30)

 இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.
(அல்குர்ஆன் : 24:31)
www.tamililquran.com

இறைவா எமது இறுதி முடிவை உனக்கு திருப்தியான முறையில் அமைத்துத் தருவானாக.

Post a Comment