Header Ads



இலங்கை கடற்படையின் மனிதாபிமானச் செயல்


சர்வதேச கடல் எல்லையில் சென்றுக்கொண்டிருந்த ஈரான் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் ஆபத்தான நிலையில் இருந்த கடற்படை சிப்பாய் ஒருவரை, இலங்கை கடற்படையினர் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர்.

குறித்த கடற்படை சிப்பாயை இன்று அதிகாலை கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.

ஈரான் போர் கப்பலில் கடமையாற்றி வந்த இந்த சிப்பாய்க்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாக இலங்கை கடற்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக ஈரான் சிப்பாயை அழைத்து வர அதிவேக படகு ஒன்றை கடற்படையினர் அனுப்பி வைத்துள்ளனர்.

திருகோணமலையில் இருந்து 60 கடல் மைல் தொலைவில் இருந்த ஈரான் கடற்படை சிப்பாயை கடற்படையினர் பாதுகாப்பாக திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

ஈரான் கடற்படை சிப்பாய் திருகோணமலை கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் கடற்படையினர், கடலில் பயணித்த கடற்படை, வர்த்தகம் மற்றும் சரக்கு கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் சுகவீனமுற்று ஆபத்தான நிலையில் இருந்தவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து சிகிச்சையளித்த பின்னர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும், கடலில் பயணிக்கும் போது உயிரிழந்தவர்களின் சடலங்களையும் கரைக்கு கொண்டு வர கடற்படையினர் தமது பங்களிப்புகளை வழங்கியுள்ளனர்.


No comments

Powered by Blogger.