Header Ads



பாலிதவின் மறுபக்கம், மீண்டும் களமிறங்கி மக்கள் மனதில் இடம்பிடித்தார்

ஒகி சூறாவளி காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இதுவரை 77481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனர்த்தம் காரணமாக களுத்துறையில் 33977 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வீதிகளில் மரங்கள் உடைந்து விழுந்துள்ளது.

எனினும் இரவு பகல் பாராமல் வீதிகளில் உள்ள மரங்களை அகற்றும் நடவடிக்கைகளில் பிரதி அமைச்சர் பாலித தெவரபெரும ஈடுபட்டுள்ளார்.

இதற்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போதும் பிரதி அமைச்சர் மக்களோடு இணைந்து செயற்பட்டிருந்தார்.

அவரின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



3 comments:

  1. well DONE SIR, YOU ARE THE ONE NEED FOR PEOPLE BUT BLOODY PEOPLE NEVER UNDERSTOOD ABOUT YOU BUT THEY LOVE CHEATING POLITICIAN

    ReplyDelete
  2. எங்கள் நாட்டுக்கு தேவை இவைபோன்ற தலைவர்கள்தான். இல்லாவிட்டால் நமது நாடு எப்பதான் .........

    ReplyDelete

Powered by Blogger.