Header Ads



பலஸ்தீன் - இஸ்ரேல் நாட்டின் தலைநகராக, ஜெருசலேம் இருக்கவேண்டும்: இலங்கை

அமெரிக்காவினால் இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட போதும், பாலஸ்தீனத்தின் தலைநகராக அது இருக்க வேண்டும் என இலங்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் தமது தூதரகத்தை டெல் அவிவ்வில் இருந்து மாற்றப்போவதில்லை என்றும் இலங்கை அறிவித்துள்ளது. ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அண்மையில் அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து தமது தூதரகத்தை ஜெருசலேத்திற்கு மாற்றப்போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். எனினும் இலங்கை தமது நிலைப்பாட்டில் மாற்றத்தை செய்யவில்லை என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளின் தலைநகராக ஜெருசலேம் இருக்க வேண்டும் என்றும் அமைச்சு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்து.

7 comments:

  1. மிகச் சரியான முடிவு

    ReplyDelete
  2. Thank God. Election season.
    Otherwise tone would b different.

    ReplyDelete
  3. இலுமினாட்டிகளின் நாடெனக்கூட ஏற்கமுடியாது, இருப்பினும் இலங்கை ஒரு பௌத்தநாடாக இருப்பதால், இஸ்லாமியரகளின் கருத்திற்கு முழு ஆதரவாக இல்லாவிடினும் உன்மையின்பக்கம் இருப்பதில் மகிழ்ச்சி...

    ReplyDelete
  4. ஜெரூஸலம் இஸ்ரவேளின் தலைநகரம் என இஸ்ரேல் அமேரிக்கா இலங்கை ஆகிய மூன்று நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொண்டுள்ளது.

    ReplyDelete
  5. @ afghani correctly said

    ReplyDelete
  6. இஸ்ரேலை ஒரு நாடாகக் கூட நாம் ஏற்கமாட்டோம். அது யூதன் அபகரித்துக் கொண்ட முஸ்லிம்களின் பூமி.
    அதில் வேறு தலைநகரமுமா..?
    வேடிக்கையாகவும், வினோதமாகம் இருக்கின்றது, , , இவர்களின் தீர்மானங்கள்.

    ReplyDelete
  7. Heading is wrong or news is wrong??? Heading says as Jerusalam is capital of both Israel and Palestine.... which is right?? Administrator : for your correction!

    ReplyDelete

Powered by Blogger.