Header Ads



நித்திரை கொள்ளும் அரசியல்வாதிகள் யார், என இரகசிய ஆய்வு - அதிடித் திட்டமும் தயார்


நாடாளுமன்றத்தில் நித்திரை கொள்ளும் அரசியல்வாதிகள் யார் என்பது பற்றி இரகசிய ஆய்வொன்று நடத்தப்பட்டதாம். அந்த ஆய்வின்போது பல அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் சபைக்குள் அமர்ந்தவாறே நித்திரையடிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இப்போது இந்த அரசியல் பிரமுகர்கள் நித்திரை கொள்வதைத் தடுக்க புதிய திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாம். நித்திரை கொள்ளும் அரசியல் பிரமுகர்கள் சபைக்கு வரும்போது "டொபி' ஒன்று இனிமேல் வழங்கப்படவுள்ளதாம். அந்த டொபியை சுவைத்துக்கொண்டிருந்தால் நித்திரையே வராதாம். இந்த "டொபி' வழங்கும் செயற்பாடு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஏற்கனவே விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சில் உள்ள ஆய்வுகூடத்தில் இப்படி "டொபி' வழங்கப்படுகிறதாம்.

அங்கு பணிபுரிவோர் நித்திரை கொள்ளாதிருக்க செய்யப்பட்ட ஏற்பாடு அங்கு வெற்றியளித்துள்ளதால் அந்தத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இஞ்சி, கறுவா, ஏலம், மிளகு அடங்கிய இந்த "டொபி' உடல்நலத்திற்கு ஏற்றதுடன் பக்கவிளைவுகள் அற்றதாம்.

(பல அலுவலகங்களுக்கும் இந்த "டொபி' எதிர்காலத்தில் தேவைப்படலாம்.)

S/O

2 comments:

  1. இந்த கதையை கேட்டாலேயே எரிச்சல் எரிச்சலா வருது செய்தியாளரே. ஒரு பாராளுமன்ற அமர்வுக்காக மில்லியன் கணக்கான பணம் செலவு செய்யப் படுவது நாம் அறிந்த விடயம். இவ்வாறு பெறுமதியான பாராளுமன்ற அமர்வுக்காக பொதுமக்களின் பிரதிநிதிகளாக சென்று அங்கு தூங்கிக்கொண்டிருக்கின்றார்கள் என்றால் அவர்களுக்கு டொபி கொடுப்பது என்பது சரியான நியாயமான விடயமாக தெரியவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் சுக போகம் அனுபவிப்பதற்காக தங்கள் இரத்தத்தை வியர் வையாக கொட்டி அகில் வரும் வருமானத்தில் வரிப்பணம் செலுத்தும் ஏழை மக்களின் செருப்புகளை அவித்த நீரை பருக்க கொழுத்தால் தான் வாக்களித்த மக்களின் ஆன்மாக்கள் சாந்தியடையும்.

    ReplyDelete
  2. பாவம்..தூங்கட்டுமே!
    முழித்திருந்து தான் என்ன பண்ண போகிறார்கள்?

    கையை தூக்க வேண்டிய நேரங்களில் மட்டும் யாராவது உதவினால் போதும் தானே.

    ReplyDelete

Powered by Blogger.