Header Ads



கிழக்கில் ரிசாத் - ஹசன் அலி கூட்டணியா..?

உள்ளூராட்சித் தேர்தலில் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், கிழக்கு மாகாணத்தில், ஹசன் அலி தலைமையிலான ஐக்கிய சமாதான கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

அதேவேளை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து பிரிந்து, ஐக்கிய சமாதான கூட்டமைப்பை உருவாக்கியுள்ள ஹசன் அலி, கிழக்கு மாகாணத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தமது கட்சி போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இணைந்து போட்டியிடுவது குறித்து, சில கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருவதாகவும், வரும் நாட்களில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்றும், அவர் கூறியுள்ளார்.

3 comments:

  1. அணைத்துக் கூட்டுக்களையும் இணைத்து ஓர் முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்கி உதவ  வேண்டிய சமுதாயப் பொறுப்பு ACJUவுக்கு உண்டு.

    இஸ்லாம் அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல என்றால் முஸ்லிம்களின் ஐக்கியம், பலம், பாதுகாப்பு... போன்றவை பாதுகாக்கப்பட அதன் சமுதாயத் தலைமை இது விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

    தம் அனைத்து பிரிவினைகளையும் மறந்து முஸ்லிம்கள் அனைவரும் ஒரே தலைமையின் கீழ் அணி திரள வேண்டும்.

    ReplyDelete
  2. பாரலுமன்றத்தில் எப்போது 21 முஸ்லிம்கட்சிகள் பிரதிபலிக்கும் இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களைதான் நித்திக்க வேண்டும் தனக்கு போனஸ் பதவி கிடைக்காவிட்டல் அவர் ஒரு கட்சி ஆரம்பிப்பார் இவ்வாறு இன்னும் எத்தனைபேர் கட்சி உருவாக்க இருக்கின்றீர் நஞ்சிமரத்தில் ஆப்பில் பலம் உருவாகுமா ?

    ReplyDelete
  3. இது நல்ல முயட்சி

    ReplyDelete

Powered by Blogger.