Header Ads



ரஷ்யாவில் சிறிலங்கா தேயிலை, சந்தையை கைப்பற்ற கென்யா முயற்சி

சிறிலங்கா தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிகத் தடையை விதித்துள்ள நிலையில், அந்தச் சந்தையைக் கைப்பற்றும் முயற்சியில் கென்யா இறங்கியுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவின் தேயிலைத் தேவையில் 23 வீதத்தை சிறிலங்கா தேயிலை நிரப்பி வந்தது.

சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைப் பொதியில் வண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 18ஆம் நாளில் இருந்து, சிறிலங்காவில் இருந்து தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், ரஷ்யாவுக்கான தேயிலைச் சந்தையில் சிறிலங்காவுக்குப் போட்டியாக உள்ள கென்யா, இந்த வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது.

கென்யாவின் விவிசாய அமைச்சின் அமைச்சரவைச் செயலர் தலைமையிலான குழுவொன்று, இதுகுறித்துப் பேச்சு நடத்த அடுத்த மாதம் மொஸ்கோவுக்குப் பயணமாகவுள்ளது.

ரஷ்யாவுக்கு கென்யா ஆண்டு தோறும், 18 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்கிறது. ரஷ்யாவுக்கு தேயிலையை ஏற்றுமதி செய்யும் மூன்றாவது பெரிய நாடாக உள்ள கென்யா, ரஷ்யாவின் 13 வீத தேயிலைத் தேவையை ஈடு செய்து வருகிறது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதியை 44 மில்லியன் கிலோவாக அதிகரிக்க கென்யா திட்டமிட்டுள்ளது.

1 comment:

  1. தகட்டு தடையை நீக்கியதுதான் மிச்சமோ???

    ReplyDelete

Powered by Blogger.