Header Ads



ரணில் மீது, விமான ஓட்டிகளின் குற்றச்சாட்டு...!

விமான நிறுவனத்தை அழிவுக்கு உள்ளாக்குவதற்கு தனது நண்பனான சரித்த ரக்வத்தவின் மகனான சுரேன் ரக்வத்தவை பிரதான நிறைவேற்று அதிகாரியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார் என விமான ஓட்டிகளின் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

புதிய முகாமைத்துவத்தின் கீழ் ஶ்ரீலங்கா விமான நிறுவனம் மீள் புனரமைக்கப்பட்டுள்ளமை குறித்து விமான நிறுவன தொழிற்சங்கங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அதன்படி, தற்போது நிலவும் முகாமைத்துவத்தின் கீழ் நிறுவனத்தை புனரமைத்தால் எதிர்ப்பார்க்கும் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாது போகும் என விமான ஓட்டிகளின் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, தனது நண்பரை சிங்கப்பூரிலிருந்து வரவழைத்து மத்திய வங்கிக்கு தலைவராக்கியமையால் அது அழிவுக்குள்ளானதைப் போல, தற்போது விமான நிறுவனத்தை அழிவுக்கு உள்ளாக்குவதற்கு தனது நண்பனான சரித்த ரக்வத்தவின் மகனான சுரேன் ரக்வத்தவை பிரதான நிறைவேற்று அதிகாரியாக நியமித்துள்ளார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் நியமிக்கப்பட்டிருப்பதற்கான காரணம் நட்புத் தான் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதுவொருபுறமிருக்க, இலங்கை விமான நிறுவனத்தின் புனரமைப்பிற்காக அரச அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவொன்று தற்போது நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நியமிக்கப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கை டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி நிறைவு செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விமான நிறுவனத்தை இலாபமீட்டும் நிலைக்கு கொண்டு செல்வதற்கான எட்டு பிரேரனைகள் அடங்கிய கடிதமொன்றை ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் சுதந்திர சேவையாளர் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

நட்டம் ஏற்படும் விமான பயணங்களை இயன்றளவு குறைத்து உச்ச பட்ச இலாபத்தை பெற்றுக் கொள்ளுதல் , எதிர்வரும் ஜந்து ஆண்டுகளுக்கான நடைமுறை சாத்தியமிகு திட்டங்களை வகுத்தல் மற்றும் சிவில் விமான சேவை தொடர்பான அறிவு சார் குழுவொன்றை ஸ்தாபித்தல் உள்ளிட்டவை அந்த கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.