Header Ads



கத்தார் எல்லையை மூடிய, சவுதி அரேபியா


தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதாக கூறி கத்தார் நாட்டின் நிலவழி எல்லைப் பகுதியை சவுதி அரேபியா நிரந்தரமாக மூடியுள்ளது.

தீவிரவாதத்திற்கு கத்தார் ஆதரவு அளிப்பதாக குற்றஞ்சாட்டி, அந்த நாட்டுடனான தூதரக உறவை சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் துண்டித்தன.

இதன் விளைவாக கத்தார் நாட்டின் மீது பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதத்தில் கத்தார் உடனான நிலப்புற எல்லைப் பகுதியை, சவுதி அரேபியா இரண்டு வாரங்கள் மூடியது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை கத்தாரின் எல்லைப் பகுதியான சால்வாவை, சவுதி அரேபியா நிரந்தரமாக மூடியுள்ளது. இந்த தகவலை சவுதியின் சுங்க வரித்துறை நிர்வாகம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

6 comments:

  1. Mahadi alaihissalam going to come.

    ReplyDelete
  2. For Abuateeq there is no mistake with qatar..but as usual he loves saudi very much. Remember both countrie under king ship . Qatar is not kilafat. But for him only saudi under his love. தமிழில் சொன்னால்....காய்கின்ற மரத்திற்குத்தான் கல்லடிக்கோடு என்பார்கள். அடிப்பவர் அபூஅதீக்...அடிபடும் மரம் சவுதி...

    ReplyDelete
    Replies
    1. Muhammad Rasheed..நீ ஏன் சவ ஊதிக்கு வக்காளத்து வாங்குகிறாய்.

      Delete
    2. Becourse we against siya group

      Delete
    3. Shfraz khan காழ்ப்புணர்ச்சி காட்டாமல் முதலாவது மனிதனைப் போல் பேசக் கற்றுக் கொள்வீராக.

      Delete
  3. அனைத்து முஸ்லிம் நாடுகளும் தமது சகோதர முஸ்லிம் நாடுகளுக்காக தமது எல்லைகளைத் திறந்து நிபந்தனைகளைத் தளர்த்தி உறவுகளை வலுப்படுத்த வேண்டும். சந்தேகப்பார்வை, உள்நோக்கம், பழிதீர்த்தல், போட்டி, பொறாமை போன்ற இன்னோரன்ன காரணங்களுக்காக கதவுகளை மூடாது திறந்த கருத்தாடல்கள் மூலம் பிணைப்பை அதிகரிக்க வேண்டும்.
    ஏனைய நாடுகளோடும் உறவுகளைப் பேணுங்கள். ஆனால் நிபந்தனைகளை விதியுங்கள். அல்லது இறுக்கமான கண்காணிப்பை மேற்கொள்ளுங்கள்.
    இது எமது இஸ்லாமிய உலகின் உடனடித் தேவையுமாகும். காலம் தாழ்த்துவது கைசேத்த்திற்கே வழிவகுக்கும். அதாவது பைத்துல் மக்தஷ் போன்று இரு புனிதப்பள்ளிகளையும் இழக்கும் நிலையும் ஏற்படலாம்.
    அல்லாஹ் பாதுகாப்பானாக!

    ReplyDelete

Powered by Blogger.