Header Ads



சவூதியில் திருமணம், செய்யவுள்ளவர்களுக்கு சிறப்புப் பயிற்சி


சவுதியில் அதிகரித்து வரும் விவாகரத்துகளை கட்டுப்படுத்துவதற்கு திருமணத்திற்கு முன்பான கட்டாய திருமண பயிற்சிகளை அரசு செயல்படுத்த தொண்டு நிறுவனம் கோரியுள்ளது.

சவுதியில் செயல்பட்டு வரும் அல்வாவாடா அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தின் தலைவர் முகமது அல்-ரடி கூறுகையில், நாங்கள் நடத்தும் திருமண பயிற்சிகள் மூலம் கடந்தாண்டு 30,000 குடும்பங்கள் பயனடைந்துள்ளது.

திருப்தி விகிதம் 92 சதவீதமாகும். வரும் 2030-க்குள் வலுவான மற்றும் அன்பான சமுதாயத்தை உருவாக்கும் குறிக்கோளை எங்கள் தொண்டு நிறுவனம் கொண்டுள்ளது.

சவுதியின் நீதி அமைச்சகம் திருமணத்திற்கு முன்பான அது குறித்த பயிற்சிகளை கட்டாயமாக்க முன்வரவேண்டும்.

அதிகரித்து வரும் திருமண விவாகரத்துகளை தடுக்க இதை செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது.

திருமணமான சில மாதங்களிலேயே அதிகம் பேர் விவாகரத்து கோருகிறார்கள் என நாங்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதே போல தங்களுக்குள் உள்ள பிரச்சனையை தீர்த்து கொள்ளாதால் 23 சதவீதம் பேர் விவாகரத்து பெறுகின்றனர்.

திருமண தகுதித் திட்டம் திருமணத்துக்கு தயாராகும் இளைஞர்களையும், பெண்களையும் ஒரு வலுவான, ஆரோக்கியமான உறவை திருமணத்துக்கு பின்னர் அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது என முகமது கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.