Header Ads



யானைகளைக் கொன்றால் கொலைக்குற்றம்: சட்டமொன்றை அறிமுகப்படுத்த தீர்மானம்

யானைகளைக் கொல்லும் நபர்களைத் தண்டிக்க கொலைக்குற்றத்துடன் தொடர்புடைய சட்டமொன்றை அறிமுகப்படுத்த நிலையான அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நாளை மறுதினம் (14) இடம்பெறவுள்ளதாக அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் இடம்பெற்ற யானைகளின் கொலை தொடர்பில் அதிகம் பேசப்பட்டது. அவற்றில் தலபூட்டுவா உள்ளிட்ட மூன்று யானைகள் உள்ளடங்குகின்றன.

இதேவேளை, காலில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் அம்பன்பொல பகுதியில் யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்கள உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

குறித்த யானைக்கு சிகிச்சையளிக்க இன்று வைத்திய குழுவொன்று செல்லவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.