Header Ads



பௌத்த பீடங்களானவை பலமான இராணுவக் கட்டமைப்புப் போன்றவை - உசுப்பேத்தும் குணவங்ச தேரர்

பௌத்த பீடங்களானவை பலம்பொருந்திய இராணுவக் கட்டமைப்புப் போன்றவை. அந்தப் பலத்தை உரிய நேரத்தில், உரியவகையில் வெளிப்படுத்த வேண்டும்.

எனவே, மகாநாயக்க தேரர் பதவியானது இளம் பிக்குகளுக்கு வழங்கப்பட வேண்டும். அப்போது தான் கட்டமைப்பு பலமாக இருக்கும். இவ்வாறு எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

புதிய அரசமைப்பை நாடாளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் சில முன்னெடுப்புகள் இடம்பெறுவதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.

தற்போதைய அரசமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது. ஆனால், புதிய அரசமைப்பு வரும் பட்சத்தில் அந்த நிலைமை மாறிவிடும்.

புதிய அரசமைப்பு எவருக்குத் தேவையாக இருக்கின்றது? அதை உருவாக்குபவர்களுக்கு பிரிட்டனால் சம்பளம் வழங்கப்படுகின்றது. இந்த விடயத்தில் பிக்குகள் விழிப்பாக இருக்கவேண்டும்.

உரிய வகையில் வழிநடத்தல்களை செய்ய வேண்டும். பிக்குகள் படையணியானது, பலம் பொருந்திய இராணுவக் கட்டமைப்புப் போன்றது.

மகாநாயக்க தேரர் இராணுவத் தளபதி, அனுநாயக்க தேரர் பிரிகேடியர் உள்ளிட்ட பதவிகளுக்குரியவர். கேர்ணல்களும் கூட உள்ளனர். அதனால் பிக்குகள் படையணி இளம் படையணியாக வேண்டும்.

அதனால் மகாநாயக்க தேரர் பதவியும் கூட இளம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு அதனால் ஓர் இளம் பௌத்த தலைமைத்துவம் உருவாக்கப்படவேண்டும்.

அதனை எமது நாட்டின் பௌத்த பிக்குகள் முன்னிலையாகிச் செய்ய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.ஒரு தரப்பை அடிப்படையாகக்கொ கொண்டே மகாநாயக்க தேரர் பதவி வழங்கப்படுகின்றது.

ஆனால், கட்டளையிடும் நிலையில் அவர்கள் இல்லை. இதனால்தான் இளம் தலைமைத்துவம் அவசியம் என்றார்.

No comments

Powered by Blogger.