Header Ads



மகாநாயக்க தேரரின் பெயரை, பயன்படுத்தி பணமோசடி

வெளிநாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாக தெரிவித்து மல்வத்து மகாநாயக்க தேரரின் பெயரைப் பயன்படுத்தி பணமோசடியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மல்வத்து மகாநாயக்கர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே சுமங்கல தேரரின் உதவியுடன் ஜப்பானில் தொழில் வாய்ப்புகள் பெற்றுத் தரப்படும் என்று கண்டிப் பிரதேசத்தில் பணமோசடியொன்று மேற்கொள்ளப்படுவதாக ஆசிரியை ஒருவர் மகாநாயக்க தேரருக்கு அறிவித்துள்ளார்.

குறித்த ஆசிரியைக்கு தொலைபேசியில் தொடர்புகொண்ட நபர் ஒருவர் மகாநாயக்க தேரர் ஊடாக ஜப்பான் நாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக தெரிவித்த போது அதை நம்பி ஒன்பதரை லட்சம் ரூபாயை அந்த மோசடிக் கும்பலிடம் குறித்த ஆசிரியை இழந்துள்ளார்.

எனினும் அவர்கள் வாக்களித்தது போன்று குறித்த ஆசிரியையின் மகனை நௌிநாட்டுக்கு அனுப்பவோ அல்லது பணத்தை திருப்பிக் கொடுக்கவோ இல்லாத நிலையில் அவர் மகாநாயக்க தேரரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து மல்வத்து மகாநாயக்கரின் முறைப்பாட்டுக்கு அமைய கண்டி பொலிஸார் சம்பவம்தொடர்பான மேலதிக விசாரரைணகளை முன்னெடுத்துளனர்.

No comments

Powered by Blogger.