December 26, 2017

றிசாத் இராஜினாமா செய்யாவிட்டால், காதைபிடித்து வெளியே வீச வேண்டும் - ஞானசாரா ஆவேசம்

அமைச்சர் ரிசாட் பதியுதீனை பணி நீக்க வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ராஜகிரியவில் இன்று -26- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

பதியுதீன் தனது பதவியை இராஜினாமா செய்யாவிட்டால் காதை பிடித்து இழுத்து வெளியே வீச வேண்டும் வில்பத்து காடழிப்பு தொடர்பில் நாம் 2014ஆம் ஆண்டு ஆரம்பம் முதலே கூறி வருகின்றோம்.

நாம் இது குறித்து ஊடக சந்திப்புக்களை நடத்தியுள்ளோம். 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தோம்.

துரதிஸ்டவசமாக அனைவரும் எம்மை இனவாதிகள் என அடையாளப்படுத்தியிருந்தனர். முஸ்லிம் எதிர்ப்பு கொள்கைகளை பின்பற்றுவதாக குற்றம் சுமத்தியிருந்தனர்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கணக்காய்வாளர் உள்ளிட்ட குழுவினர் இந்த காடழிப்பு பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளனர்.

வில்பத்தில் காடழிப்பு இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர். விசாரணை நடத்தி குற்றவாளிகள் உரியமுறையில் தண்டிக்கப்பட வேண்டும்.

விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிப்பதற்கு ரிசாட் பதியுதீன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

பிணை முறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட போது ரவி கருணாநாயக்க பதவியை இராஜினாமா செய்தார், ஓர் பிரச்சினை காரணமாக விஜயதாச ராஜபக்ச அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

எனினும், இந்த மாதிரியான ஓர் தீர்மானம் ஏன் ரிசாட் தொடர்பில் எடுக்கப்படுவதில்லை. நிறைவேற்று அதிகாரம் தேவையான சந்தர்ப்பத்தில் பயன்படுத்தவே இருக்கின்றது.

படமெடுக்காவிட்டால் பாம்பை கூட விறகு கட்டுடன் சேர்த்து கட்டி விடுவார்கள் என புத்தபெருமானும் கூறியுள்ளார் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

12 கருத்துரைகள்:

Where is Azad Sally, who said that Janasara has become a good boy.......

ALL THESE MUSLIM SO-CALLED POLITICIANS, INCLUDING RISHAD BATHIUDEEN AND AZAD SALLY HAVE TO BE CHASED AWAY FROM POLITICS, INSHA ALLAH. I HOPE THE MUSLIMS WILL DO THAT. NO MUSLIM SHOULD VOTE THESE DECEPTIVE HOODWINKING AND HYPOCRITIC RASCALS IN ANY ELECTIONS, INSHA ALLAH.
"THE MUSLIM VOICE".

You are 100% right, if he conducted any deforestation, he should be arrested and punished as per the law and order.
Investigate on the financial support where did he get from and the whole network to establish the arabic colony in north.
NPC SHOULD TAKE CARE OF THIS ISSUE IMMEDIATELY TO TAKE SERIOUS ACTION AGAINST THIS ILLEGAL ACT BY THIS RADICAL MUSLIM MINISTER

He can raise his voice aginst any illegal act conduct by anybody in this democratical country

What is illegal act?
Burned down other people’s property or
Jealousy with other community’s progress?

யார் குற்றம் செய்தாலும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது சட்டத்தின் கடமையாகும். அது தராதரம் பாராது மிக விரைவாக எடுக்கப்பட வேண்டும். அது தான் சகோதரர் ரிசாத்துக்கும் நல்லது. நாட்டு மக்களுக்கும் நல்லது.

Anusath what the hell you are talking. This fellow has done lot lot lot of illegal acts, there are lot of voices was raised and now too raising in this democratic country as you said, what the f...king action was taken against to him man.

சபாஷ் எங்கடா வில்பத்து நாடகத்தின் தேர்தலுக்கான விஷேச வெளியீடு இன்னும் வெளிவரவில்லை என்று காத்துக்கொண்டிருந்தேன். தற்போது வெளியாகியுள்ளது.. இனி இதனை வைத்து நீண்ட தொடர் வெளியாகும்... மிகவிரைவில் தாஜுடீனின் ஜனாஸாவை தோண்ட முயற்சிப்பார்கள்.. பொய் மூட்டை ஆசாத் சாலி அவர் நடிக்கும் நாடகங்களில் ஒன்றான கிரான்பாஸ் பள்ளிவாசல் சம்பந்தமாக நேற்று கதைகள் விட்டார்... இவரின் ஏனைய நாடகங்களும் விரைவில் வெளிவரும்... இவர்களை நம்பும் மக்கள் இருக்கும் வரைக்கும் இவர்கள் சூப்பர் ஸ்டார் தான்..

Gnanasara is only when the election comes. Minister of Residency The monster has become regular. Why is it that the Rishat minister is only a matter of time when the election comes only if there is a problem. This is like a vote in some elections. Think people

தேர்தல் வந்தால் மட்டும் ஞானசார .ரிசாட் அமைச்சருக்கு .ஏசுரது வாடிக்கையாகி விட்டது.ஏன் தேர்தல் வந்தால் மட்டும் ஏதாவது பிரச்சனையை எடுத்து ரிஷாட் அமைச்சருக்கு ஏசுராரு மற்ற நேரம் சும்மா தான் இருக்காரு .இது ஏதோ தேர்தலில் வாக்கு வேட்டை போல இருக்கு .சிந்தியுங்கள் மக்களே

Anusanth chandrabal @ இந்த இனவாதிகளுக்கு சோனி என்னத்த செய்தாலும் அது தப்புத்தான் இவனுகளுக்கு வில்பத்து எல்லை எங்க என்டும் தெரியாது இந்த காடு எப்போது பிரகடணப்படுத்தப்பட்டது என்றும் தெரியாது? எந்த இனவாதியாவது கூப்பாடு போட்டடால் அதுக்கு வக்ககாலத்து வாங்க வந்திருவாங்கள் பெரிய போர்கொடி தூக்க இவனுகளாள ஏதும் புடுங்க முடியுமானால் புலிப்பயங்கரவாதிகள் இருக்கும் போதே முஸ்லிம்களை வடக்கில் முற்றாக அழித்திருப்பானுகள் அது முடியலண்டுதான் இப்ப உழறுகிளானுகள் கனவில் நாங்கள் படைத்தவனான அல்லாhவை நம்பும் கூட்டம் இந்த கூப்பாடுகளின் வார்த்தைகள் எங்ஙகளை ஒண்டும் செய்யயாது மாறாக இவர்களின் சமுகத்தின் உரிமை வெற்றிபெற முஸ்லிம்களின் சப்போட்டு இல்லாமல் கனவிலும் நடக்காது அதையும் முள்ளிவாய்க்காலில் உணர்ந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்

Anusanth chandrabal @ இந்த இனவாதிகளுக்கு சோனி என்னத்த செய்தாலும் அது தப்புத்தான் இவனுகளுக்கு வில்பத்து எல்லை எங்க என்டும் தெரியாது இந்த காடு எப்போது பிரகடணப்படுத்தப்பட்டது என்றும் தெரியாது? எந்த இனவாதியாவது கூப்பாடு போட்டடால் அதுக்கு வக்ககாலத்து வாங்க வந்திருவாங்கள் பெரிய போர்கொடி தூக்க இவனுகளாள ஏதும் புடுங்க முடியுமானால் புலிப்பயங்கரவாதிகள் இருக்கும் போதே முஸ்லிம்களை வடக்கில் முற்றாக அழித்திருப்பானுகள் அது முடியலண்டுதான் இப்ப உழறுகிளானுகள் கனவில் நாங்கள் படைத்தவனான அல்லாhவை நம்பும் கூட்டம் இந்த கூப்பாடுகளின் வார்த்தைகள் எங்ஙகளை ஒண்டும் செய்யயாது மாறாக இவர்களின் சமுகத்தின் உரிமை வெற்றிபெற முஸ்லிம்களின் சப்போட்டு இல்லாமல் கனவிலும் நடக்காது அதையும் முள்ளிவாய்க்காலில் உணர்ந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்

Post a Comment