Header Ads



இணைந்த வடக்கு கிழக்கு என்பது, எமது அசைக்க முடியாத கோரிக்கை - அனந்தி

வடக்கு, கிழக்கு இணைந்த சுயநிர்ணயத்தைத்தான் கோரிநிற்கின்றோம். அரசு விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இணைந்த வடக்கு கிழக்கு என்பது எமது அசைக்க முடியாத கோரிக்கை என வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள கல்முனை குருந்தையடி மக்களை நேற்று சந்தித்த போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு என்பது எமது தாயக பூமி. வடக்கு மக்களைவிட கிழக்கு மக்கள் கடந்த கொடிய யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

இருப்பினும் வடக்கு கிழக்கு மக்கள் இருசாராரும் இணைந்தே போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். ஒன்றாகவே அனைத்தையும் சந்தித்தோம்.

கல்முனையில் ஒரு இனம் இன்னொரு இனத்தை அடக்கி ஆள முற்பட அனுமதிக்க முடியாது. சாய்ந்தமருது மக்கள் அவர்களது சபைக்காகப் போராடுவதும், அதனைப்பெறுவதும் நியாயமே.

அவர்களுக்கான தனியான சபையை நல்லாட்சி அரசின் ஜனாதிபதி வழங்க முன்வரவேண்டும். ஆனால் மிகுதியைப் பிரிப்பது அல்லது அதனூடாக தமிழர்களை அடக்கி ஆள முற்படுவதை அனுமதிக்க முடியாது.

கல்முனை மாகநரசபைத் தேர்தலில் நீங்களும் போட்டியிட்டு தங்கள் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றி உரிய அபிவிருத்தியை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன், புதிய தேர்தல் சட்டத்தின்படி பெண்களிற்கான அரசியல் பங்குபற்றலென்பது 25 வீதமாக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. அதுவும் அதிகரிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

13 comments:

  1. பிரிக்கப் பட்ட வட கிழக்கு மீண்டும் இணைக்க முடியாது என்பது எமது அசைக்க முடியாத நிலைப்பாடு... விக்னேஸ்வரன் போன்ற இனவாதிகள் இருக்கும் வரைக்கும் முஸ்லிம்களின் ஆதரவு ஒருபோதும் கிடையாது.. முஸ்லிம்களின் வரலாறு தெரியாமல் முஸ்லிம்களை மரக்கலயர்கள் என்று விமர்சிக்க இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? இனக்க அரசியல் இவர் போன்ற இனவாதிகள் இருக்கும் வரைக்கும் சாத்தியம் இல்லை...

    ReplyDelete
    Replies
    1. “மரக்கலயர்கள்” என்றால் என்ன?

      Delete
    2. அதனை கூறிய இனவாத முதல்வரிடம் போய் கேளு?

      Delete
    3. மறக்கலே என்பது சிங்களவர்களால் முஸ்லிம்களை அழைக்க பயன்படும் சொல் இன்று சிங்கள இனவாதிகள் இதை ஏதோ இழிவான வார்த்தையாக எண்ணி பிரயோகிக்கின்றனர். சிங்களத்தில் மறக்கலே என்பது
      "மா + ரெக்க + லே " என்னை காத்த இரத்தமெண்டு பொருள். அதாவது போர்துகேசரிடமிருந்து ஒரு சிங்கள அரசனை காத்து தன்னுயிரை விட்ட ஒரு முஸ்லிம் பெண்னிற்காக அந்த சிங்கள அரசனால் முஸ்லிம்கள் அன்று மா ரெக்க லே என்று அழைக்கப்பட்டு பின்னாட்களில் அது மறக்கலே ஆகிவிட்டது

      Delete
    4. அப்போ... நம்ம CM முஸ்லிம்களை பற்றி பெருமையாக தானே சொன்னாரு.
      மறக்கலேயை முஸ்லிம்கள் மறந்து விட்டார்கள்.

      முஸ்லிம் இனவாதிகள் எப்போதும் ஒன்றும் இல்லாத விடயங்களுக்கு எல்லாம் விக்கியை எதிர்க்கிறார்கள். இதில் பெரிய காமேடி என்னவென்றால் மாற்றத்தை விருப்பும் சமூகத்தாருக்கு ‘மறக்கலே’ என்றால் என்னவென்றே தெரியாதாம், ஆனால் எதிர்ப்பாம்.

      Delete
    5. இந்த வரலாற்று உண்மை இவர் போன்ற இனவாத முதல்வரிக்கு தெரியாது.. இந்நாட்டு முஸ்லிம்கள் வரலாறு முழுவதும் இந்நாட்டை பாதுகாத்தவர்கள்... மாறாக நாட்டையே இந்நாட்டு மக்களையே காட்டிக்கொடுத்த சமூகம் அல்ல... இலங்கை எம் தாய் நாடு.. சிங்கக் கொடிதான் எங்கள் தேசிய கொடி...

      Delete
    6. சொல்லவேயில்லை!,
      எப்போதிலுருந்து உங்கள் தாய்நாடு பாக்கிஸ்தானிலிருந்து இலங்கையாக மாறியது?.

      Delete
    7. இலங்கை முஸ்லிம்களின் தேசப்பற்றை உன் போன்ற தேச துரோகிகளுக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை...

      Delete
  2. வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமா அல்லது பிரிய வேண்டுமா?

    இந்த தலைப்பு சம்மந்தமாக கீழே பட்டியல் இடப்பட்ட வினாக்கள் கிழக்கு முஸ்லீம்களின் சிந்தனைக்கு.

    * இனவாதம் பிரதான ஆட்சி அம்சமாக உள்ள இக்காலத்தில் வடக்கும் கிழக்கும் இணைவதனால் அல்லது பிரிவதனால் முஸ்லீகளுக்கு ஏற்படக்கூடிய குறுகிய கால, நீண்ட கால நன்மை, தீமைகளை நாம் முறையாக சிந்திக்கின்றோமா?

    * மேற் சொன்ன சிந்தனையின்றி வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு இணையக் கூடாது அல்லது பிரியக் கூடாது என கோசமிட்டுக் கொண்டிருக்கின்றோமா?

    *உணர்சிகளுக்கு அடிமைப்படவில்லை என்றால் அரசியல்வாதிகளின் பிழையான வழி நடத்தல்களினால் அவர்களின் ஆதாயங்களுக்காக நாம் இப்பிரச்சனையின் ஆழம் புரியாது கூட்டத்தோடு கூட்டமாக கோவிந்தா போடுகின்றோமா?

    * வடக்கும் கிழக்கும் இணைவதோ அல்லது பிரிவதோ - இரண்டிலுமே கிழக்கு முஸ்லீகளுக்கு மிகப் பெரியதொரு பங்களிப்பு இருப்பதனையும், இப்பங்களிப்புக்குள்ள பேரம் பேசும் சக்தியையும் நாம் தெளிவாக புரிந்துள்ளோமா?

    * இப் பேரம் பேசும் சக்தியை நமது சமுதாய நன்மைகளுக்காக நாம் எவ்வாறு பயன்படுத்தலாம்?

    இணைவதென்றால் தமிழ் சகோதரர்களுடனும், பிரிவதென்றால் சிங்கள சகோதரர்களுடனும் நாம் பேரம் பேச வேண்டியது காலத்தின் கட்டாயம். எனவே என்ன பேச வேண்டும் என்று நம்மை நாம் தயார் செய்ய வேண்டிய நேரம் இது.

    கிழக்கு முஸ்லீம் புத்தி ஜீவிகளே நம்மிடையே உள்ள பிரதேச வாதங்களையும், அரசியல் வேற்றுமைகளயும் மறந்து நாம் ஒன்று பட்டு சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணம் இது. இத்தருணத்தை தவறவிடாது நாம் ஒன்று பட்டு நம் பேரம் பேசும் சக்தியை நல்ல முறையில் பயன்படுத்த முன்வாருங்கள்

    ReplyDelete
  3. மண்ணோடு இணைய முன்
    மனிதனோடு இணையுங்கள்

    மனங்களை வெல்லுங்கள்
    மண் தானாக வந்து சேரும்

    அனைவரதும் தாயகம் சுவனமே
    அவனது அடியார்களே சுவனர்கள்

    அவர்கள் இருக்கும் வரைதான்
    அனைத்துமே இயங்கும் பூமியில்!

    ReplyDelete
  4. தமிழ் ஈழமும் அசைக்க முடியாத கோரிக்கை யாகவே இருந்தது...

    ReplyDelete
  5. பிரிந்த வடக்கு கிழக்கு என்பது எமது அசைக்க முடியாத கோரிக்கை

    ReplyDelete
  6. Well dine Ananthi, keep your good wirk in east also

    ReplyDelete

Powered by Blogger.