Header Ads



மதவாத அமைப்புக்களை பயன்படுத்தி, சிலர் ஆட்சிக்கு வர முயற்சி - சந்திரிக்கா


(அஷ்ரப்.  ஏ .சமத்)

சில  அரசியல் வாதிகள யுத்தம் முடிவடைந்த பின்னரும் அரசியல் நோக்கத்திற்காக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக  சில மதவாத அமைப்புக்களை பயண்படுத்தி மீண்டும்  இனங்களுக்கிடையே குரோதத்தை வளா்த்து அதன் மூலம் ஆடசிக்கு வருவதற்கு முணைகின்றனா்.  என முன்னளாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாய்கக குமாரதுங்க உரையாற்றினாா்.

மேற்கண்டவாறு நேற்று(03)  பண்டார நாயக்க ஞாபகாா்த்த மண்டபத்தில்    ”சம் சம் பௌன்டேசனினால் ” வறிய  15 ஆயிரம்  பாடசாலை மாணவ மாணவிகளுக்கு  பாடசாலை உபகரணங்கள் அப்பியாச புத்தகங்களை வாங்குவதற்காக 45 இலட்சம் ருபா நிதியை கல்வியமைச்சாிடம் கையளிக்கும் வைபவம் நடைபெற்றது.இவ் வைபவத்தின் பிரதம அதிதியாக கலந்து கொ்ண்டு உரையாற்றும்போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாய்கக தெரிவித்தாா்.

அவா் அங்கு மேலும் உரையாற்றுகையில் - 

 இந்த நாட்டில் சகலரும் ஒரு நாடு  சகலருக்கும் அவா்களுக்குரிய உரிமைகளை கொடுப்பதற்கும்  பௌத்த மக்கள்  விருப்பம் தெரிவிக்கின்றனா்.ஆனால் ஒரு சிலரே இதனை எதிா்க்கின்றனா்.   இந்த நல்லாட்சி ஆட்சிக்கு வந்ததும்  இந்த நாட்டில் வாழும் சகல மக்களும் ஒரு கொடியின் கீழ்  வாழ்வதற்கும் அவா்களுக்கான தீா்வை பெற்றுக் கொடுப்பதற்கும் முயற்சித்து வருகின்றது. இந்த நல்ல ஆட்சி அரசாங்கம்  பொது மக்களுக்கு உறுதியளித்த வாக்குறுதிகளை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி வருகின்றதா என்பதை நான் சொல்லத் தேவையில்லை. அது மக்களுக்கே நன்கு புரியும். 

இந்த  நாட்டில் உள்ள பாடசாலைகளில் உள்ள தமிழ் ்மாணவா்கள் சிங்கள மாணவா்களிடம் அல்லது முஸ்லீம் மாணவா்களிடம் கண்டு அவா்கள் வாழ்க்கையிலேயே  பேசியது இல்லை. அதற்காக பாடசாலை மட்டத்தில் இருந்து  மூவனங்களையும் சாா்ந்த மாணவ மாணவிகளை அவரது கலை, காலாச்ச்ாரம், மதம் மொழி ரீதியான புரிந்துணா்வினை சகோதரத்தினை ஏற்படுத்துவதற்கு எனது தலைமையில் உள்ள தேசிய ஒற்றுமைப்பாட்டிற்கான அமைப்பு பல வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது.  எனவும் முன்னாள் ஜனாதிபதி அங்கு உரையாற்றினாா்.

சம் சம்  zam zam  பௌன்டேசன் நிறுவனத்தினால்  வருடா வருடம்  இந்த நாட்டில் வாழும் முவினங்களையும் சோ்ந்த கல்வி முன்னேற்றத்திற்காக உதவி வருகின்றது. இவ் அமைப்பின் தலைவராக  அஷ்ஷேக்  முப்தி யுசுப் ஹணிபா அவா்கள் 2013ஆம் ஆண்டில் இருந்து கல்வி, வீடமைப்பு சுயதொழில்  இயற்கை அணா்த்தங்கள் மற்றும் வறுமைக்கோட்டினில் வாழும் மூவினங்களை மேம்படுத்தும் ஒரு நிறுவனமாகும்.  கடந்த 3 வருடங்களாக 31 ஆயிரம் பாடசாலை மாணவா்களுக்கு உதவியுள்ளது.   . இவ் ஆண்டின்  இம் அமைப்பினை சேவைகளை  தேசிய ஒற்றுமைப்பாட்டிற்கும் நல்லிணத்திற்குமான அலுவலகத்தின் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் வேண்டுகோளின் படி   இவ் அமைப்பின்  முஸ்லீம் தனவந்தா்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட  நிதியத்தினை கல்வியமைச்சின் ஊடாக வறுமைக் கோட்டின் கீழ் வாழ் ்மக்களுக்கு உதவுமாறு  கேட்டுக் கொண்டிருந்தாா்.

அதன் படி  சுமாா்  14 மாவட்டங்களில் கல்விகற்கும் மூவினங்களையும் சாா்ந்த வறுமைக்கோட்்டின் கீழ் வாழும் பாடசாலை மாணவா்களுக்கு இவ் அமைப்பு 15 ஆயிரம் ்மாணவ மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் காலணி பாடசாலைப் பைகள் வாங்குவதற்கு 45 இலட்சம் ருபாவை கல்வியமைச்சரிடம் இவ்  அமைப்பின் தலைவா் றிஸ்வி முப்தி ஹணிபா கையளித்தாா். ஒவ்வொரு பக்கேஜ்  3ஆயிரம் ருபா பெறுமதி வாய்ந்ததாகும். 

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள்  ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க கலந்து  சிறப்பித்தாா். அத்துடன் அமைச்சா்களாக ஏ.எச்.எம் பௌசி முஸலிம் சமய தபால் துறை அமைச்சா்  எச். ஏ ஹலீம்  கலந்து கொண்டனா்

அத்துடன் இந் நிகழ்வின்போது -இவ் அமைப்பு அனுராத புரத்தில் உள்ள ஒரு சிங்கள பாடசாலைக்கு ஒரு கட்டித்தை நிர்மாணித்து தருவதாகவும் வாக்குறுதியளித்தது.

1 comment:

Powered by Blogger.