Header Ads



யாழ் - தேசிய மீலாத் விழாவும், ஜனாதிபதியும்..!

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் இருப்பதையே அறியாத ஜனாதிபதி, எப்படி இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்த்து தரப்போகிறார் என பானதுறை பிரதேச சபையின் தலைவர் இபாஸ் நபுஹான் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தனது ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது..

யாழ்பாணத்தில் தேசிய மீலாதுன் நபி விழா நிகழ்வு இடம்பெற்றிருந்தது. வழமையாக ஜனாதிபதி, பிரதமர் போன்ற முக்கிய புள்ளிகள் கலந்துகொள்வது வழமை. இம்முறை இந் நிகழ்வுக்கு ஜனாதியை அழைக்க பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருந்த போதிலும், அந்த முயற்சிகள் யாருக்குமே வெற்றியளிக்கவில்லை. இலங்கை முஸ்லிம்களை பல விடயங்களில் புறக்கணித்து வரும் ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன இவ்விடயத்திலும் முஸ்லிம்களை புறக்கணித்துள்ளார். கிந்தோட்டை சம்பவம் தொடர்பில் இதுவரை வாய் திறக்கவில்லை என்பதை இவ்விடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமானது.

இவர் இந் நிகழ்வை புறக்கணித்தது தொடர்பில் பல விடயங்கள் நம்பத்தகுந்த  ஊடகங்களில் வெளிப்பட்டுள்ளன. அதில் பிரதானமானது, யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளார்கள் என்பது ஜனாதிபதிக்கு தெரியாதாம். முஸ்லிம்கள் இல்லாத இடத்தில் ஒரு நிகழ்வை நடத்தும் போது அங்கு மக்களை எதிர்பார்க்க முடியாதல்லவா? இது சாதாரணமான ஒன்றல்ல. அன்று விடுதலைப் புலிகள் இலட்சக் கணக்கான முஸ்லிம்களை வெளியேற்றியிருந்தனர் என்பது வரலாறு. இது சாதாரணமாகவே அனைவருக்கும் தெரியும். இதுவே தெரியாமல் இருப்பதானது எமது வரலாற்றை நையாண்டிக்குட்படுத்துவது போன்றாகும். இலங்கை நாட்டில் யாழ்ப்பாணத்தில் இலட்சக் கணக்கான முஸ்லிம்கள் உள்ளார்கள் என்பது தெரியாதவர், ஒரு ஜனாதிபதியாக இருக்க தகுதியற்றவர்.

இப்படியான ஒருவரை பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஆதரித்து ஜனாதிபதியாக்கியமைக்கு வெட்கப்பட வேண்டும். இதனைப் போன்ற தவறு வேறு ஏதுமில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீது வெறுப்புற்று படு குழியில் வீழ்ந்துள்ளனர்.

2 comments:

  1. President has participated in the State Christmas Festival and released some 500+ prisoners on the occasion of Xmas. When he neglects us we should also neglect him.

    ReplyDelete
  2. அவரு எப்பதான் முஸ்லிம்கள்விடயத்தில் வைத்திருந்த. இனிமேலும் இவர் வாய்திறக்கவுமாட்டார் இவரை நம்பி நாங்கள் அப்படியோ அழிந்துபோய்த்திடுவோம். இவரையும் இவருடைய அடிவருடிகளை நம்பி பலனில்லை. மாறாக ஜேவிபி ஆதரிப்பதை தவிர வேறவழியில்லை. அதுக்கும் ஒத்துவாரமுடியாதவர்கள் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவுவழங்குவதுதுதான் மிக நன்று. தவறு செய்தவனுக்கு திருந்த சந்தர்ப்பம் கொடுப்பதுதான் எங்களுடைய பழக்கவழக்கம்.

    ReplyDelete

Powered by Blogger.