Header Ads



மக்களே, குற்றவாளிகளை நிராகரியுங்கள்..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவின்போது குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்ள் மற்றும் தொடர்புடையவர்களை உள்வாங்க வேண்டாம் எனவும், அவ்வாறானவர்கள் உள்வாங்கப்பட்டால் அது தொடர்பில் கட்சித் தலைவர்கள், தொகுதி அமைப்பாளர்களுக்கு எதிராக கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மார்ச் 12 அமைப்பின் இணைப்பாளரும்  பெப்ரல் அமைப்பின் தலைவருமான ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்தல் தொடர்பாக மார்ச் 12 இயக்கம் தமது நிலைப்பாடு தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு கொழும்பிலுள்ள இலங்கை மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார்.

1 comment:

  1. அதுபோன்றே, முஸ்லிம் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும்போதும், அவர்களுக்கு வாக்களிக்கும்போதும், கீழ்க்காணும் தகுதிகள் கொண்டவர்களாக அவர்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்வது, சமுதாயத்தின் சமயம் சார்ந்த ஓர் கடமையாகும்.

    இத்தகுதிகள் குறிப்பாக, பொதுத்தாபனமாகிய பள்ளிவாசல்களை பரிபாலிப்போருக்குத் தகுதியாக, ஏக இறையோனாகிய அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். 

    இவை பொது வாழ்வில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நமது அரசியல்வாதிகளுக்கும் மிகப் பொருந்தும்:

    "அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்."
    (அல்குர்ஆன் : 9:18)

    இத்தகுதிகள் கொண்டோரை காசுக்கு விலை போகாதவர்களாகக் கருதலாம்.

    ReplyDelete

Powered by Blogger.