December 14, 2017

சவுதியில் சினிமா அனுமதியின் எதிரொலியும், தூள் கிளப்பும் பின்னூட்டங்களும்..!

-Zafar Ahmed-

சவூதி அரேபியாவில் சினிமா தியேட்டர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு இருப்பது தான் இன்றைய தேதியில் ஹாட் நியூஸ்..'மெர்சலா விவேகமா சிறந்த உலக சினிமா என்று சண்டை போட்ட விடலைப் பயல்கள் எல்லாம் 'சவூதி நாசமாகப் போகிறது ' என்று கிளம்பி இருப்பதுதான் கிளுகிளுப்பின் உச்சம். இந்த மென்டலிட்டியில் இருக்கும் ஆத்மாக்களை வைத்துப் பத்து செக்கண்ட் கதைகள் நிறைய எழுதலாம். இந்த விவகாரம் பேசுபொருளானால் பாருங்கள் அடுத்து நடக்கும் கூத்தை.

தமிழகத்தில் சாவு வீட்டிலும் இளையராஜா, திருமண வீட்டிலும் இளையராஜா, பயணங்களிலும் இளையராஜா, தூங்கப் போகவும் இளையராஜா என்று இளையராஜா பாடல்கள் மக்களின் வாழ்க்கையில் ஒன்றிப் போனது போல இங்கே எல்லாவற்றிலும் வடிவேல் தான் ராஜா..'புனித இஸ்லாம் தோன்றிய சவூதி என்ற தேசம் கெட்டுச் சீரழியப் போகிறது'..சினிமா வரப் போகிறது..என்று அலறிக் கொண்டு எந்த சினிமா கூடாது கோஷம் எழுப்புகிறோமோ' அதே சவுதியைக் கலாய்க்கவும் கண்டிப்பாய் தமிழ் சினிமாவில் லெஜன்ட் வடிவேல் தான் மீம்ஸ் வடிவில் உதவப் போகிறார்..அண்ட சராசரத்தில் இருக்கும் அத்தனை பிரச்னைகளையும் பலருக்கு வடிவேல் மீம்ஸில் தீர்க்கத் தெரியும்.

இந்த சினிமாவை வைத்து சவூதியை விமர்சிக்கும் முல்லாயிசம் எல்லாம் அபத்தத்தின் உச்சம்...சவூதி இன்று நேற்றல்ல..அது மன்னர் பைசல் கொல்லப்பட்ட 70களின் மத்தியிலேயே கிடுகிடு என்று பாதாளத்தை நோக்கிப் பாயலாயிற்று..1980 இற்குப் பின்னரான அமெரிக்காவின் மத்திய கிழக்குக் காதலுக்குத் தூது போன மாமா பையன் தான் சவூதி...1990களில் சதாம் ஹுஸைன் குவைத்தை ஆக்கிரமித்து தனது தேசத்தின் மாநிலம் என்று அறிவித்த போது ஈராக்கைத் தாக்க தனது அத்தனை நவீன ஆயுதங்களையும் கொண்டு வந்து குவித்தது அமெரிக்கா.அமெரிக்கா அதன் சரித்திரத்தில் மிகப் பெரும் இராணுவ பேஸை அமைக்க ரெட் காபட் வரவேற்புக் கொடுத்த தேசம் சவூதி.

'சவூதி என்ற புனித தேசத்தில் தியேட்டர்களுக்கு அனுமதியா என்று இங்கு போராளிகள் வெடிப்பது போல அப்போது ஒஸாமா பின்லேடன் சீறினார்..'மக்கா மதீனா என்ற புனிதஸ்தலங்கள் இருக்கும் தேசத்தில் இவன் எதுக்கு ?' ம்ஹும்..கேட்க ஒரு நாதி இல்லை..அதன் பின்னர் ஒஸாமாவுக்கு அமெரிக்கா நிரந்தர எதிரி தேசம் ஆனதெல்லாம் சரித்திரம்.

இதுவரை காலமும் சவூதிக் கலாசாரத்தை எல்லாம் இஸ்லாமியக் கலாசாரமாய்க் கொண்டாடிக் கொண்டு இருந்தவர்களுக்கு சவூதியின் மூடப்பட்ட முக்காட்டுக்குள் நாறிக் கொண்டிருந்த அசூசிகள் எல்லாம் கண்ணில்படவே இல்லை..இவர்களுக்கு சவூதியின் தற்போதைய போக்கு மூக்கின் மேல் விரலை அல்ல முழங்காலை வைக்கத் தோன்றி இருக்கிறது..அதிருப்தியில் கொந்தளிக்கிறார்கள்..சவூதி இளவரசரும் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள தன் உறவுகளை எல்லாம் வீட்டுக்காவலில் அடைத்து தன்னிஷ்டத்திற்குப் புகுந்து விளையாடுகிறார். இதுவரை இந்த உலகத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோனுமே செம எண்டர்டெய்ன்மென்ட் கொடுத்துக் கொண்டு இருந்தனர்..இந்த ஜோக்கர் க்ளப்பில் சவூதியின் இளவரசரும் இணைந்து இருக்கிறார் என்று சொல்லிக் கொண்டு கடந்து போய்விடலாம்.

மேற்குறிப்பிட்ட ஆக்கத்திற்கு கீழே, எழுதப்பட்டிருந்த சில பின்னூட்டங்கள் கீழ்வருமாறு..!

1. சூர்யா,அஜித்,விஜய் எல்லோரும் அரபு மொழியில் பேசும் போது கொள்ளையழகாக  இருக்கும்.

2. இனி நம்ம பசங்களுக்கு கெப்பிதான் தியட்டர்க இருந்து செல்பி இறங்கும்

3. மாற்றம் ஒன்றே மாறாததுன்னு நம்ம ஊரு போராளி யாரோ சவுதி இளவரசருக்கு சொல்லிட்டாங்கபோல....

4. வீட்டிற்கு வீடு சாட்டிலைட் வழியாக எந்த சினிமா வேணுமென்றாலும் பார்க்கும் நிலை இருக்கும் போது அதை proper channel ஊடாக அனுமதிப்பது ஒரு வகையில் சிறந்ததே..! குவைட் திரையரங்களில் குவைட் நாட்டவரை விட சவுதி நாட்டவர்களையே அதிகம் காணலாம்..! சுகபோகத்திற்கு என்றே பஹ்ரைனை வைத்துக் கொண்டு இவர்கள் அடிக்கும் லூட்டிகளை ,இந்த திரையரங்கங்கள் ஒரு போதும் வென்றிடாது..!!

5. ஏப்ரலில் உம்றா போனால் Robo 2.0 பார்க்க முடியுமோ

6. இதுவரை காலமும் சவூதிக் கலாசாரத்தை எல்லாம் இஸ்லாமியக் கலாசாரமாய்க் கொண்டாடிக் கொண்டு இருந்தவர்களுக்கு சவூதியின் மூடப்பட்ட முக்காட்டுக்குள் நாறிக் கொண்டிருந்த அசூசிகள் எல்லாம் கண்ணில்படவே இல்லை..இவர்களுக்கு சவூதியின் தற்போதைய போக்கு மூக்கின் மேல் விரலை அல்ல முழங்காலை வைக்கத் தோன்றி இருக்கிறது.

7. இளவரசர் இப்பத்தான் ஆரம்பிச்சீக்குறார் இனி என்டடைமன்ட் சிரியா, பலஸ்தீன , போன்ற முஸ்லிம்களின் உயிர்கள் போவாதாகத்தான் இருக்கும் 

8. சவூதியில் படித்துக் கொண்டிருப்பதால்,நோ கொமண்ட்ஸ்

9. சவூதி எளவரசர் ஜோக்கர் க்ளப்பில் இணைந்திருக்கிறார் என்று சொல்ல முடியாது,  செம்மறியாடு ஓநாயாக உருமாறியிருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். அது தீணிக்காகவும் தன் அதிகார இருப்பைக் காத்துக்கொள்ளவும் எந்த எல்லை வரையிலும் பாயலாம்.

0 கருத்துரைகள்:

Post a Comment