Header Ads



உனக்கு என்ன பைத்தியமா...?

மகிந்த ராஜபக்சவின் புகைப்படத்தை காட்சிப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது என மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினராக இருப்பதால், அவரது படத்தை மேற்படி வேட்பாளர்கள் பயன்படுத்த முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் தொலைபேசியில் உரையாடிய தகவலையும் இசுரு தேவப்பிரிய வெளியிட்டுள்ளார்.

அந்த தொலைபேசி உரையாடலில், “தற்போது நான் என்ன செய்வது” என மகிந்த ராஜபக்ச கேட்டார். “சார் நீங்கள் கட்சியை பிளவுப்படுத்த போகிறீர்களா?” என நான் கேட்டேன்.

“உனக்கு என்ன பைத்தியமா, நான் ஒருபோதும் கட்சியை பிளவுப்படுத்த மாட்டேன்” என முன்னாள் ஜனாதிபதி பதிலளித்ததாக இசுரு தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, 2ஆவது முறையாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காப்பாற்ற தன்னை அர்ப்பணித்ததாகவும், மகிந்த ராஜபக்சவின் இணக்கமும் அதற்கு கிடைத்தது எனவும் டீல்கார்களே இந்த இணக்கத்தை கெடுத்தனர் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொது எதிரி கூட்டு எதிர்க்கட்சியல்ல எனவும் ஐக்கிய தேசியக் கட்சியே பொது எதிரி எனவும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராக போட்டியிடுவதே சுதந்திரக் கட்சியின் நோக்கம் எனவும் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.