Header Ads



ஜனாதிபதியின் பக்கம், பல்டி அடிப்பவர்கள் அதிகரிப்பு

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய மேல் மாகாண சபையின் பிரதித் தலைவர் யசபால கோரலகே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, தனது ஆதரவை தெரிவித்துள்ளார். 

நேற்று பிற்பகல் அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதன்போது, யசபாலவுக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஹொரண ஆசன அமைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. 

அத்துடன், அக் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளர் பதவி சுசில் கருணாதிலக்கவுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய கம்பஹா மாவட்டத்தின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் குழுவொன்றும், ஜனாதிபதியை சந்தித்து தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். 

இதற்கமைய, நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து, அவர்கள் சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையையும் பெற்றுக் கொண்டுள்ளனர். 

இதன்படி, அத்தனகல்ல பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அசித மான்னப்பெரும, மிரிஹான பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் காமினி தென்னக்கோன் மற்றும் அத்தனகல்ல பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான சுனில் ஷாந்த நவரத்ன, கீர்த்தி கொரதொட, நலீன் பீரிஸ் ஆகியோரே இவ்வாறு ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.