Header Ads



தமிழ், முஸ்லிம் இனக்கலவரம் ஒன்றை தூண்ட முயற்சி - வவுனியா பொலிஸ் பொறுப்பதிகாரி

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வோராச்சி தலைமையில் வவுனியா நகர கிராம சேவையாளர் அலுவலகத்தில் இன்று -02- கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் வவுனியா நகர், வைரவர் புளியங்குளம் , கற்குழி, தோணிக்கல் மற்றும் வைரவர் புளியங்குளம் ஆகிய பிரதேசங்களைச் சேரந்த சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் உரையாற்றிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,

வவுனியாவில்அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் சில அசம்பாவித சம்பவங்களை வைத்து ஒரு சிலர் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் இனக்கலவரம் ஒன்றை தூண்டுவதற்கு முயற்சித்துள்ளதாகவும் அவர்களை இனம் கண்டு விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை நேற்றைய தினம் வேப்பங்குளம் பகுதியில் வியாபார நிலையம் தீப்பற்றியதையும் அச்சம்பவம் தொடர்பாக ஒருசாரார் வீண் வதந்திகளை பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்கள் பண்டிகை காலங்களாக இருப்பதால் இளைஞர்கள் மது போதையில் மோட்டார் சைக்கிள்களை வேகமாக செலுத்துவதாலும், கூட்டமாக குழுக்களாக நின்று பொதுமக்களுக்கு இடையூறு செலுத்துபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உங்களின் பிள்ளைகளை நீங்களே திருத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

1 comment:

  1. அப்பாவி முஸ்லீம், தமிழன் அடித்துக் கொண்டு செத்தால், சிங்களவனுக்குச் சந்தோஷம்தான்!

    இனக்கலவரம் ஒன்றுக்கு, இலங்கை போலீஸ் இப்போதே திட்டமிடுகிறது போல விளங்குது.

    ReplyDelete

Powered by Blogger.