Header Ads



ஒரே நாளில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு "சபாஷ்"


(இன்றைய (04) நவமணி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்)

நாட்டின் 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கு அடுத்தாண்டு பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது.

நல்லாட்சி அரசு பதவியேற்றபின் நடைபெறும் முதலாவது தேர்தல் இதுவாக இருப்பதனால் அரசிற்கு மக்கள் மத்தியிலுள்ள ஆதரவினைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கு கிடைத்துள்ள ஓர் அரும் சந்தர்ப்பமாக இத்தேர்தல் அமையவுள்ளது.

இத்தேர்தலை நடத்த விடாதிருப்பதற்காக சில சக்திகள் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செதிருந்தன.

இந்த வழக்கினைத் தாக்கல் செதவர்கள் எல்லைப்பிரிப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செயுமாறு கோரியே வழக்கினைத் தாக்கல் செதிருந்தனர். 

நாட்டில் தேர்தல் நடைபெறுவதனை நிறுத்தும் பின்னணி நோக்கிலே இந்த வழக்கு தாக்கல் செயப்பட்டிருந்ததாக எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்திலும் வெளியிலும் சுட்டிக்காட்டியதனையடுத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

எல்லைப் பிரிப்பில் குறைபாடுகள் இருப்பின் அவற்றுக்கு தீர்வு பெற வேண்டுமென்றிருந்தால் வழக்கினைத் தாக்கல் செதவர்கள் சில அழுத்தங்களுக்காக வழக்கினை வாபஸ் பெற்றிருக்கக் கூடாது.

எல்லைப் பிரிப்பில் சர்ச்சையுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தவிர்ந்த 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தல் ஆணைக்குழு நியமனப் பத்திரங்களை கோரியதனால் தேர்தலை ஒத்திப்போட அக்கறை காட்டியவர்களது முகத்தில் கரி பூசியது போன்ற நிலை ஏற்பட்டது.

இரண்டரை வருட காலமாக மறுக்கப்பட்டிருந்த உள்ளூராட்சித் தேர்தலை உடைத்து உடைத்தேனும் நடத்துவதற்கு எடுத்த முடிவு பாராட்டுக்குரியது.

அதேநேரம் தேர்தலை நடத்துவது தொடர்பாக பாராளுமன்றத்தினூடாக பிரதமர் ரணில் விக்கிரம
சிங்க அழுத்தம் கொடுத்திருந்தார். 203 உள்ளூராட்சி மன்றங்களிற்கான தேர்தல் நடத்துவதற்கு காலத்தடை விதித்து உத்தரவு பிறப்பித்த மறுகணமே சபாநாயகர் கரு ஜயசூரிய கட்சித் தலைவர்களது மகாநாட்டை பாராளுமன்றத்தில் கூட்டி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தி 4ஆம் திகதி நடைபெறவிருந்த நீதிமன்ற விசாரணையை சட்டமா அதிபரூடாக முன்கூட்டியே நடத்த ஏற்பாடு செயப்பட்டது. ஜனநாயகத்தை மதிக்கும் சகலருக்கும் இந்த ஏற்பாடு குறித்து திருப்தி தெரிவிக்கின்றனர்.

சில தரப்பினர் இந்தத் தேர்தலை நடத்தாமலிருப்பதற்காக பல்வேறு காரணிகளை முன்வைத்தனர். முன்னைய அரசின் எல்லை பிரிப்பில் தவறு இருப்பதாகக் கூறினர். எல்லைப் பிரிப்பு அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் கழித்து தேர்தலுக்காக நியமனப் பத்திரம கோருவதற்கு தயாரான போதே இந்த வழக்கு தாக்கல் செயப்பட்டது. தேர்தலை ஒத்திப்போட முற்பட்டவர்களது ஒரு தொடர் முயற்சியாகவே இதனையும் குறிப்பிடலாம். 

எவ்வாறான போதும் நீண்ட காலமாக மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்த உள்ளூராட்சித் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான தேர்தல் ஆணைக்குழு எடுக்கும் நடவடிக்கைகள் ாராட்டப்பட வேண்டும். 

No comments

Powered by Blogger.